இசைக்கடவுளின் சாதனைகள்.
இளையராஜா, இதுவரை நான்காயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
தொள்ளாயிரம் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பின்னணி இசை கோர்த்துள்ளார்.
லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்து ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருஞ்சிறப்பை 1993 ஆம் ஆண்டு பெற்றார். (அந்த சிம்பொனியை ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ரா இன்னும் வெளியடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது).
தமிழக அரசின் கலைமாமணி விருதினையும், 1988ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருதினையும், 1995ஆம் ஆண்டு கேரள அரசின் விருதினையும், இசையில் சாதனை புரிந்ததற்காக 1994ஆம் ஆண்டு அண்ணமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலை பல்கலைகழகத்தினாலும் 1996ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைகழகத்தினாலும் முனைவர் பட்டம் (டாக்டர் - Degree of Doctor of Letter) பெற்றவர், இளையராஜா.
இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை நான்கு முறைப்பெற்றுள்ளார். அவருக்கு விருதினைப் பெற்றுத் தந்த படங்கள் :
1985இல் - சாகர சங்கமம் (தெலுங்கு)
1987இல் - சிந்து பைரவி (தமிழ்)
1989இல் - ருத்ர வீணை (தெலுங்கு)
2009இல் - பழஸிராஜா (மலையாளம்)
(இசைக்கடவுளி ஏனைய ஆர்வங்கள்)
இளையராஜா புகைப்படக்கலையிலும், இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் ஆர்வம் கொண்டவர்.
இவர் எழுதிய புத்தகங்கள் :
சங்கீதக் கனவுகள்'' (ஐரோப்பா பயண குறிப்புகள்)
''வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது'' (புதுக்கவிதைகள் தொகுப்பு)
''வழித்துணை''
''துளி கடல்''
''ஞான கங்கா''
''பால் நிலாப்பாதை''
''உண்மைக்குத் திரை ஏது?''
''யாருக்கு யார் எழுதுவது?''
''என் நரம்பு வீணை''
''நாத வெளியினிலே'' (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை, இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பு)
''பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்''
போன்றவைகள்
''இளையராஜாவின் சிந்தனையில் உருவான முத்துக்கள் ஆகும்.
இசைஞானி வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.இன்னும் பல அண்டுகள் வாழ்ந்து இசை ரசிகர்களுக்கு விருந்து படைக்க இயற்கை அன்னை துணைபுரிய வேண்டுவோம்.
No comments:
Post a Comment