August 21, 2011

இசைக் கடவுள் இளையராஜா

இசைக்கடவுள் இளையராஜாவை பற்றி நான் என்ன சொல்வது உலகமே வியந்து கொண்டிருக்கும் ஆச்சர்ய மனிதர் அவர்.அவரது சாதனைகளை விவரிக்க ஆரம்பித்தால் ஒரு நாள் இரு நாள் அல்ல பல நாள் நீடிக்கும் அந்த அளவுக்கு இசையால் சாதனை புரிந்திருக்கிறார்.அவருடைய இசையில் எவ்வளவு இனிமை அப்பப்பா சொன்னாலே மெய்சிலிர்க்கும் .இளையராஜாவின் இசையைப்போல் எந்த இசையும் என்னை ஈர்த்ததில்லை .அவருடைய இசைக்கு மயங்காதவர்கள் இருந்தால் சொல்லி அனுப்புங்கள்.அந்த அதிசய பிறவியைப் பார்க்க வேண்டும்.அந்த அளவிற்கு உறுதியாக சொல்ல முடியும் இசைஞானியின் இசைக்கு மயங்காதவர் யாரும் இருக்க முடியாதென்று.



அவரைப்பற்றி தெரியாதவர்களைப் பார்ப்பது அரிது.என்னுடைய வலைப்பக்கத்தில் இசைக்கடவுளைப் பற்றி பதிய வேண்டும் என்ற ஆசையினாலும் ,ஆர்வத்தினாலும்தான் இந்தப் பதிவு. இந்தப் பதிவு தமிழ் விக்கிப்பீடியாவின் உதவியுடன் தொகுக்கப்படுகிறது.

இசைஞானி தேனி மாவட்டம் பண்ணையபுரம் என்ற கிராமத்தில் ஜூன் 2,1943 ம் ஆண்டு பிறந்தார்.தந்தை ராமசாமி தாயார் சின்னத்தாயம்மாள் ஆகியோர் ஆவர்.
அவரது இயற்பெயர் ராசய்யா ஆகும்.
பாவலர் வரதராஜன்,கங்கை அமரன்,டேனியல் பாஸ்கர் ஆகியோர் அவரது உடன் பிறப்புகள் ஆவர்.

அவரது மனைவியின் பெயர் ஜுவா என்பதாகும்.

கார்த்திக்ராஜா,யுவன் சங்கர் ராஜா,பவதாரிணி ஆகியோர் அவரின் வாரிசுகள். தந்தையைப் போல மூவரும் இசைத்துறையிலே இருக்கின்றனர்.யுவன் சங்கர் ராஜா தமிழக திரைப்பட இசையமைப்பில் முன்னணியில் இருக்கிறார்.இவரை அப்பாவிற்கு தப்பாமல் பிறந்தப் பிள்ளை என்று தாராளமாகக் கூறலாம்.அந்த அளவிற்கு யுவனின் பாடல்கள் கொடிகட்டிபறக்கிறது.


இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இசைஞானி இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராக திகழ்ந்தார்.

அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படம் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான 'பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது.



தமிழகநாட்டுப்புற இசை கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசை யில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார்.


சிறுவயதிலேயே ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும் நாடகங்களிலும் பங்கு கொண்டார்.




1969 ஆம் ஆண்டு தன் 29ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார்.


சென்னையில் தன்ராஜ் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோ கருவியையும், கிதார் கருவியினையும் வாசிக்க கற்றுக்கொண்டார். பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் Classical guitar (Higher Local) தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்கினார்.


அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து எஸ். ஜானகி பாடிய "மச்சானைப் பாத்தீங்களா.." என்ற பாடல் மிகப் பிரபலமானது. அதை தொடர்ந்து பதினாறு வயதினிலே, பொண்ணு ஊருக்கு புதுசு போன்ற படங்களில் நாட்டுப்புற மணம் கமழ இவர் இசையமைத்த பாடல்கள் பெரும் வரவேற்பினை பெற்றன.



நாட்டுப்புற இசை மட்டுமல்லாமல், கருநாடக செவ்விசை மெட்டுக்களில் இவர் அமைத்த பாடல்களாகிய, மோகன ராகத்தில் கண்ணன் ஒரு கைக்குழந்தை, ரீதி கௌளை ராகத்தில் சின்னக் கண்ணன் அழைக்கிறான் போன்றன இவருக்கு மேலும் புகழினை தேடித்தந்தன.

ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்கள் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றனர். ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிரா, இளையராஜா இசையமைத்த சிம்பொனியினை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இளையராஜா தமிழ் திரைப்படக் கலைஞர்களால் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றார்.



இந்திய திரைப்படங்களில் மேற்கத்திய பாரம்பரிய இசையை புகுத்தியவர்களில் இளையராஜாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.


இசைஞானாயின் திரைப்படமல்லாத மற்ற இசையாக்கங்கள் .


இளையராஜா, பஞ்சமுகி என்ற கருநாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கியுள்ளார்.


"How to name it" என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா.

இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்தது இந்த இசைத்தொகுப்பு. இத்தொகுப்பினை இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் மற்றும் மேற்கத்திய இசையமைப்பாளரான ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார்.


Nothing But Wind" என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர் ஹரி பிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்டார்.


India 24 Hours என்ற இந்திய பண்பாட்டின் பல்வேறு வர்ணங்களை விவரிக்கும் ஆவண குறும்படத்திற்கு பின்னணி இசையினை அமைத்தார். இதில் வலி, மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது சிறப்பாகும்.



1996 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தார்.



ராஜாவின் ரமண மாலை" என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார். இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது.
இளையராஜாவின் கீதாஞ்சலி" என்ற பக்தி இசைத்தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.


ஆதி சங்கரர் எழுதிய "மீனாக்ஷி ஸ்தோத்திரம்" என்ற பக்திப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.


மூகாம்பிகை" என்ற பெயரில் கன்னட பக்தி இசைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.

இன்னும் இசைக்கடவுளைப்பற்றி பல பிரமிப்பூட்டும் தகவல்கள் உள்ளன. அவைகள் அடுத்த இடுகையில் .

1 comment:

reelcutter said...

இசைக்கடவுள்இசைக்கடவுள்