December 6, 2010

என்ன செய்யலாம்?

உலகில் பணம்இருந்தால் எந்த பாவ காரியங்களோ,தவறுகளோ,கொடுமைகளோ ,வரம்பு மீறல்களோ எதை வேண்டுமானாலும் பயமின்றி செய்யலாம்.அதற்கு ஒரு சின்னச் உதாரணம் எனக்கு நேற்று நடந்த சம்பவத்தைச் சொல்லலாம்.இரவு எட்டு மணியிருக்கும் நான் நான்கு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தேன். ஒரு சிக்னல் அருகே வரும்போது மஞ்சள் வண்ண விளக்கு எரிந்து கொண்டிருந்தது அதனால் நிறுத்தக் கோட்டைத் தாண்டிச் சென்றுவிட்டேன்.தாண்டிவிட்டேனென்றால் ஒரு பத்தடி முன்பாக சென்றிருப்பேன் அவ்வளவே.திடீரென வாகனத்தின் முன்னால் போக்குவரத்து பணியாளர் ஒருவர் கையை நீட்டிக்கொண்டு நின்றார்.நான் வாகனத்தை நிறுத்தி விட்டேன்.வாகனத்தை ஓரமாக விடச்சொன்னார் நானும் அவ்வாறே செய்தேன் .பின்பு அருகில் வந்த அந்த ஆள் சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருப்பது உனக்கு தெரியவில்லை குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகிறாயா என மிரட்டலாக கேட்டார்.ஆனால் உண்மையில் நடந்தது நான் மஞ்சள் விளக்கு எரிந்து கொண்டிருந்த போதுதான் நிறுத்தக்கோட்டை கடந்தேன் .ஆனால் நான் கடந்த சில வினாடிகளிலேயே சிகப்பு விளக்கும் எரிந்திரிக்கிறது. அதை நான் கவனிக்கவில்லை.இதை அந்த ஆளிடம் சொன்னால் காதில் வாங்கமாட்டான் அதனால் சொல்லாமல் இருப்பதே நலமென அமைதியாக இருந்து விட்டேன்.பின்பு அந்த ஆள் என் முகத்தினருகிலே வந்து ஊதச்சொன்னார் நானும் ஊதினேன்.நான் குடிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். பின்பு ஓட்டுனர் உரிமம் இருக்கிறதா என்றார்.நான் இருக்கிறது என கூறிவிட்டு என் சட்டைப் பையிலிருந்து ஓட்டுனர் உரிமத்தை எடுக்க முற்பட்டேன்.அப்போது அந்த ஆள் என்னிடம் நூறு ரூபாய் கொடுத்துவிட்டுச் செல் என்கிறான். நான் அவனை பரிதாபமாக பார்த்தப்படியே அவ்வளவு பணம் என்னிடம் இல்லையே என்று அவனிடம் பொய் சொன்னேன் என்னிடம் இருந்ததோ வெறும் நூற்று நாற்பது ரூபாய்கள்தான் அதிலும் நூறு ரூபாயை அவனுக்கு தாரைவார்ப்பதா என யோசித்தேன்.அந்த யோசனைக்கே இடந்தராமல் மறுமுறை அவன் மிரட்டலில் பணத்தை கொடுத்தே விட்டேன். இதற்கு அடுத்ததாகத்தான் கவனிக்க வேண்டிய விசயமே இருக்கிறது.அது என்னிடம் ஓட்டுனர் உரிமத்தை கேட்டவன் பணத்தை பார்த்ததும் அந்த கடமையை மறந்து விட்டான்.மேலும் சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போதே சாலையை கடந்து செல்லுமாறு சைகையால் உத்தரவிடுகிறான்.வாங்கிய பணத்திற்கு விசுவாசமாம்.இப்படிப்பட்ட நல்லவர்களை என்ன செய்யலாம்.பணத்தைப் பார்த்ததும் கடமை காற்றில் பறந்துவிட்டது. இது ஒருச் சின்ன சம்பவம்தான் இருந்தாலும் சின்ன தவறுகள்தான் சமுதாயத்தை சீரழிப்பதற்ககு போதுமானதாக இருக்கிறது.இந்த தவறில் என்னுடை பங்கும் இருக்கிறது.ஆதலால் நானும் இப்போது குற்றவாளிதான் என்னை என்ன செய்லாம்?

2 comments:

marimuthu said...

அவனிடம் சட்டம் பேசியிருந்தால் உங்களை காவல் நிலையத்திற்கும், நீதிமன்றத்திற்க்கும் அலைக்கழித்து உங்கள் நேரத்தை வீணடித்திருப்பார்கள்! நூறு ரூபாயோடு கருமம் தொலைந்ததே என்று நிம்மதி அடையுங்கள் ! உண்மையில் குற்றவாளி உங்களிடம் கையுட்டு பெற்றவன்தான்!

Try 🆕 said...

நன்றி மாரிமுத்து அவர்களே,
என் தளத்திற்கு வருகை தந்த முதல் நபர் நீங்கள் அது மட்டுமல்ல என்னுடைய பதிவுக்கும் கருத்திட்டு என்னை மகிழ்சியில் மூழ்கடித்திருக்கிறீர்கள்.மேலும் ஒரு சின்ன வேண்டுகோள் அடிக்கடி சும்மாவாச்சும் நம் தளத்திற்கு வந்து செல்லவும்.
மீண்டும் உங்களுக்கு நன்றி