December 10, 2010

இளந்தொழிலதிபர்களுக்கு ஓர் ஆலோசனை.ஷங்கர் மருவாடா

நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ அதில் உங்களுக்கு விருப்பமில்லையென்றால்,நீங்கள் ஓரு தவறான இடத்தில் இருக்கிறீர்கள் என்று பொருள்.இரண்டாவது தைரியம்.குழு உங்களுடனே நின்றுவிடும் மேலே நகராது.வாய்ப்புகளை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் தேர்வு ஒரு வேளை தவறாக போனாலும் நீங்கள் வெல்லும்போது உங்கள் கடந்தகாலத் தோல்விகள் எல்லாம் கழுவிக் களையப்பட்டுவிடும். நீங்கள் பல கதாபாத்திரங்களை ஏற்க வேண்டியிருக்கும்.தம்முனைப்பு உள்ளவராகவும்,அதே சமயம் தன்மையானவராகவும் இருக்க வேண்டியிருக்கும்.நீங்கள்தான் ஒன்றைச் செய்கிறீர்கள்,உங்கள் பின்னால் நீங்களேதான் இருக்கவும் வேண்டியிருக்கிறது.நீங்களே வழி நடத்த வேண்டும்,நீங்களே உங்களுக்கு பக்கபலமாகவும் இருக்கவும் வேண்டும்.ஒரு முக்கியமான வாடிக்கையாளர் வருகை தரும் நாளன்று உங்கள் டாய்லெட்டைச் சுத்தம் செய்யும் நபர் வரவில்லையென்றால்,நீங்கள்தான் அதைச் சுத்தம் செய்ய வேண்டும். இதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. வேலை அனுபவம் எங்கள் விசயத்தில் உதவி புரிந்தது.ஒரு கலாச்சாரத்தின் மீது கவனத்தைச் செலுத்துவது என்பது முன்பு நான் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து கற்று கொண்டதுதான்.மதிப்பீடுகளிலும் நன்னெறிக் கோட்பாடுகளிலும் அதிக அளவு கவனம் செலுத்துவது ஓர் அற்புதமான கலாசாரம். ஆய்வுகள் பற்றி எனக்கு என்னவெல்லாம் தெரியுமோ அவையெல்லாம் ப்ராக்டர் அண்ட் கெம்பிளிலிருந்து கிடைத்தவைதான். ஒன்றைப் பற்றிய சிறிதளவு ஞானம்கூட இல்லாமல் பேரார்வம் என்பது வராது.ஆனால் எல்லோருக்கும் பொருந்தக்கூடிய ஒரே அளவு என்பது இல்லை.திறமைசாலிகளை நீங்கள் எப்போதுமே வேலைக்கு எடுத்துக்கொள்ள முடியும். தனியார் முதலீட்டாளர்களைத் தவிர ஒரு தொழிலதிபருக்கு ஒரு தேவதையும் தேவை.ஆரம்பக்கட்டத்தில் ஒன்றைத் தொடங்குவதற்காக கொஞ்சம் விதை நிதி உங்களுக்குத்தேவை.அதை உங்கள் நண்பர்களிடமிருந்து, குடும்பத்தாரிடமிருந்து பெறமுடியும்.உங்கள் யோசனையைச் செயல்படுத்தி நிரூபித்துக் காட்டப் போதுமான அளவு உங்களுக்கு பணம் தேவை. உங்கள் விருப்பம் என்ன என்று நீங்கள் அறிகிற போது உங்கள் யோசனை நிரூபிக்கப்படுகிறபோது,தனியார் முதலீடுகள் கட்டாயம் வரும்.உங்கள் தொழிலை மேலும் வளர்க்க அவர்களின் முதலீடுகளைப் பெறுவதுதான் சிறந்த வழி என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.ஆனால் வெளித்தலையீடுகளையும்,கட்டுப்பாடுகளையும் ஒப்புக்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும். நன்றி ஷங்கர் மருவாடா, தமிழாக்க ஆசிரியர், ரவிபிரகாஷ், நூல்,முயற்சி திருவினையாக்கும்

No comments: