November 3, 2014

சில்லரை

சினிமாவில் யதார்த்தத்தை மீறிய சில காட்சிகள் நிஜ வாழ்க்கையில் நடக்கும்போது மிக சுவாரஸ்யமாகிவிடுகிறது ... அப்படிதான் இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தையில் வெட்டியாக நின்று கொண்டிருந்தபோது ஒரு குடிகார பிச்சைக்காரர் ஒரு பக்தி கானத்தை மிகுந்த உச்சக் கூக்குரலில் பாடி பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார் .அவர் பாடும் தோரணையும் வித்தியாசமான பாவனையும் என்னை கவர்ந்ததால் அவரை கவனித்துக்கொண்டிருந்தேன் ...அவரும் நான்கைந்தை வரிகளை மட்டும் மீண்டும் மீண்டும் பாடியவாறே நான் நின்றிருந்த கடைக்கருகே வந்து மீண்டும் முதல் வரியிலிருந்து பாட ஆரம்பித்தார் ..கடைக்கு காய்கனி வாங்கவந்தவர்கள் பாடக பிச்சைக்கரரின் குரலின் உச்சநிலையைக் கண்டு அதுவும் செவிப்புறமாய் பாடும்போது மிரண்டுதான் போனார்கள் ...இதைப்பார்த்த கடை முதலாளிக்கு சிறிது கோபம் வந்துவிட்டது .இருந்தாலும் வெளிக்காட்ட முடியாத சூழ்நிலையாதலால் அமைதியாக இருந்துவிட்டார் ..பாடகரும் பாடிய நிலையிலேயே மூன்று முறை கையேந்தி விட்டார் ..முதலாளி கண்டுகொள்வதாக இல்லை ..மீண்டும் பாடகரின் ஒருசில முயற்சிச்சிக்குப் பின் முதலாளி வாயைத் திறந்து சில்லறை இல்லை என்று மூஞ்சை கோணலாக வைத்துக்கொண்டே சொன்னார் ...கொஞ்சமும் அலட்டாத பாடகர் பாடிபடியே இந்தாங்க எடுத்துக்கோங்க என்று தன் தட்டை முதலாளி முன் வைத்தார் ...... அப்படியே முதலாளி அதிர்ச்சியாயிட்டாரு.. சுத்தியிருந்த நாங்களும்தான் ...சில வினாடிகளுக்குப் பிறகு சாவதனாமாக பாடகர் சொல்கிறார் சில்லறை எடுத்துக்கோங்கன்னு சொல்லவந்தேன் அப்படி என்று விட்டு மீண்டும் பாட ஆரம்பித்து விட்டார் ..அவர் பாடலை ஆரம்பிக்கவும் நான் சிரிக்க ஆரம்பிக்கவும் சரியாய் இருந்தது..அதுவும் பலமாக சிரித்தேன் என் கூட துணைக்கு சிரிக்கவும் ஒருசிலர் இருந்தனர் ....இப்போது முதலாளிக்கு பிச்சைக்காரனை மறந்துவிட்டார் என்னை முறைக்க ஆரம்பித்தார் ..நான் இன்னும் பலமாக சிரித்தேன் .அவர் கோ ப ப்டவில்லை அவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டார் ..... . ஆனா பிச்சைக்கார பாடகருக்குதான் காசு கிடைக்கவில்லை ..பிறகு நான்தான் என்கிட்ட சில்லரை இல்லையென சொல்லி வேறு ஒருவரிடம் ஒரு ரூபாய் கொடுக்க சொன்னேன் .....
.
நான் கொடுக்க சொல்லவில்லை என்றால் என்னையும் எடுக்கச்சொல்லியிருப்பார் ...........சில்லரை ......

No comments: