October 28, 2011

இந்தியாவின் டாப் டென் கோடீஸ்வரர்கள்.

அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை இந்தியாவின் டாப் பாணக்கார மனிதர்கள் ஐம்பது பேரை பட்டியலிட்டிருக்கிறது.அதில் முதல் பத்து இடங்களில் வருவோரின் சிறு குறிப்பு.இந்த பட்டியலில் வரும் பெரும்பாலானோரின் சொத்து மதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு சில ஆயிரம் கோடிகளை இளந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



1.முகேஷ் அம்பானி,
சொத்து மதிப்பு.ரூபாய்.1,11,000 கோடி (22.6 பில்லியன் டாலர்)
ரிலயன்ஸ் குழுமம்.



2.லஷ்மி மிட்டல்,
சொத்து மதிப்பு..ரூபாய்.94,080 கோடி (19.2 பில்லியன் டாலர்)
உலகின் முதல் தர இரும்பு உற்பத்தியாளர்.


3.அஸிம் பிரேம்ஜி,
சொத்து மதிப்பு...ரூபாய்.63,700 கோடி (13 பில்லியன் டாலர்)
விப்ரோ நிறுவனர்.



4.சாஷி மற்றும் ரவி ருய்யா,
சொத்து மதிப்பு.ரூபாய்.49,980 கோடி (10.2 பில்லியன் டாலர்)
இவர்கள் இருவரும் சகோதரர்கள்.


5.சாவித்ரி ஜின்டால்,
சொத்து மதிப்பு.ரூபாய்.46,500 கோடி (9.5 பில்லியன் டாலர்)
இவர் ஒரு பெண் தொழிலதிபர்.ஜின்டால் குழுமம்.


6.சுனில் மிட்டல்,
சொத்து மதிப்பு.ரூபாய்.43,120 கோடி (8.8 பில்லியன் டாலர்)
பார்தி ஏர்டெல் நிறுவனர்.


7.கௌதம் அடானி,
சொத்து மதிப்பு.ரூபாய்.40,180 கோடி (8.2 பில்லியன் டாலர்)
அடானி குழுமம்.


8.குமார் மங்கலம் பிர்லா,
சொத்து மதிப்பு.ரூபாய்.37,730 கோடி (7.7 பில்லியன் டாலர்)
ஆதித்யா பிர்லா குழுமம்.


9.பல்போன்ஜி மிஸ்ரி,
சொத்து மதிப்பு.ரூபாய்.37,240 கோடி (7.6 பில்லியன் டாலர்)
சர்பார்ஜி பல்போன்ஜி குழுமம்.


10.அதி கோத்ரேஜ்,
சொத்து மதிப்பு.ரூபாய்.33,320 கோடி (6.8 பில்லியன் டாலர்)
கோத்ரேஜ் குழுமம்.



மற்றும் 13 வது இடத்தில் அனில் அம்பானி இருக்கிறர்.2004 முதல் 2010 வரை டாப் பத்துற்குள் வலம் வந்தவர் இந்த வருடம் 13 ம் இடத்தையே பிடித்தார்.அதற்கு காரணம் அவருடைய நிறுவனம் 7 பில்லியன் டாலர்கள் நஷ்டம் அடைந்ததாக குறிப்பிடுகிறார்கள்.இவரின் சொத்துமதிப்பு.ரூபாய்.28,910 கோடி (5.9 பில்லியன் டாலர்)


தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான HCL நிறுவனர் ஷிவ் நாடார் 14 வது இடத்தை பிடித்திருக்கிறார்.அவருடைய சொத்து மதிப்பு.ரூபாய்.22,540, கோடி (4.6 பில்லியன் டாலர்)



23 வது இடத்தில் இன்னும் ஓர் தமிழர் இருக்கிறார் அவர்தான் சன் நெட்வொர்க் நிறுவனத்தின் உரிமையாளர் காலாநிதி மாறான்.கடந்த ஆண்டு 16 வது இடத்தில் இருந்தார் அப்போது அவருடைய சொத்து மதிப்பு.ரூபாய்.17,000 கோடி ஆகும் .ஆனால் இந்த ஆண்டு இவருடைய சொத்து மதிப்பு.ரூபாய்.12,250 கோடி (2.5 பில்லியன் டாலர்)


உலக பொருளாதார மந்தத்தின் விளைவாக கடந்த ஆண்டு பட்டியலில் இருந்தவர்கள் இந்த ஆண்டு காணாமல் போய் இருக்கிறார்கள்.இந்த ஆண்டின் பட்டியலில் இருப்பவர்களும் ஒரு சில புதியவர்களை தவர மற்றவர்கள் பெரும் இளப்புடனே பட்டியலில் நீடிக்கிறார்கள்.




தகவல்கள்.www.forbes.com

No comments: