October 27, 2011

ஐந்தும் எங்களுக்கே உற்சாகத்தில் இந்திய அணி.

இந்திய அணி பெற்றது வெற்றியல்ல மாபெரும் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.எப்படியாவது தொடரை கைப்பற்றினால் போதும் என்று நினைத்த ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக ஐந்து போட்டிகளையும் வென்று நாங்கள் உலகக் கோப்பையை வென்ற அதே அணிதான் என நிருபித்திருக்கிறது.இங்கிலாந்து மண்ணில் பெற்ற தோல்விக்கு ஓரளவு ஈடு கட்டியாகிவிட்டது.இது பழிதீர்த்து கொண்ட தொடர் அல்ல என்று டோனி குறிப்பிட்டாலும் இந்திய ரசிகர்கள் ஒவ்வொருவரும் இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியிடம் வாங்கியதை வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்தாகிவிட்டது என்று திருப்திபட்டுக் கொள்வார்கள்.இங்கிலாந்து மண்ணில் நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி போராடிதான் தோற்றது.ஆனால் இந்திய மண்ணில் இங்கிலாந்துக்கு போராட வாய்ப்பே தராமல் அனைத்து போட்டிகளிலும் அபாரமான வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி.




சச்சின்,சேவாக்,ஜாகிர்கான்,ஹர்பஜன் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் இங்கிலாந்து தொடரை எதிர்கொண்ட போது எப்படிதான் போராட போகிறார்களோ என்ற எண்ணம்தான் தோன்றியது. அந்த எண்ணத்தை பொய்யாக்கும் விதத்தில் முதல் போட்டியை வென்று இரண்டாம் போட்டியை வென்று மூன்று,நன்கு என ஐந்தையும் வென்றார்கள்.

இந்த வெற்றிகளுக்கெல்லாம் மூல காரணம் அணித் தலைவர் டோனிதான் என்பது அனைவரும் அறிந்ததே.வெற்றிப் படிக்கட்டில் ஏற டோனிக்கு உதவியாக இந்தி வீரர்கள் அனைவரும் பக்கபலமாக செயல்பட்டனர். குறிப்பாக விராத் கோலி,ஜடேஜா,ரெய்னா,புதுமுகம் ஆரோன் என வரிசையாக சொல்லிக்கொண்டேச் செல்லலாம்.நான்கு ஆட்டங்களில் களமிறங்கிய டோனி நான்கிலுமே ஆட்டமிளக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த தொடர் வெற்றியின் மூலம் இந்திய ரசிகர்கள் சொல்லெண்ணா மகிழ்சியில் திளைத்திருக்கிறார்கள்.அதோடு இருபது ஓவர் தொடரையும் வென்று அதற்கடுத்தாற் போல் வரும் ஆஸ்திரேலிய தொடரையும் வென்று ரசிகர்களை இதே உள்ளக் களிப்போடு வைத்திருப்பார்கள் என்று நம்புவோம்.

No comments: