அன்பைப் பற்றி சொல்வதென்றால் அன்பில்லையேல் இவ்வுலகம் இல்லை அப்படியென்று சொல்ல மாட்டேன்.காரணம் பெரும்பாலும் அன்பு என்பது பணத்தைப் போலவே பரிமாறப்படுகிறது. அதாவது பரிமாற்றங்கள் நடைபெறுகின்றது.இவ்வளவு கொடுத்தால் இவ்வளவு கிடைக்கும் என்ற விகிதக்கணக்கு பார்க்கப்படுகிறது.இது மனிதனின் இயல்பு யாராவது யார்மீதாவது அ ன்பு செலுத்தினால் அவர்களும் நம்மீது அன்பு செலுத்த வேண்டும் என்று நினைப்பது இயல்பு அப்படி நினைக்காமல் இருந்தால் ஆச்சரியம்தான் ஏனென்றால் மனிதன் அன்பு செலுத்துவதைவிட அன்பு செலுத்தப்படுவதைதான் அதிகம் விரும்புகிறான்.இப்படி அன்பு என்பது வியாபாரம் ஆகிவிட்டது.இந்த உண்மையை அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.நீங்கள் இதை ஏற்றுக்கொள்ளாவிடினும் எனக்கு சம்மதமே ஏனென்றால் நான் உங்களை அன்பு செய்கிறேன்.தவறகள் தவிற்கப்பட வேண்டியதல்ல திருத்தப்பட வேண்டியவை.இதை நான் சொல்லவில்லை ஏதோ ஒரு வெளிநாட்டு அறிஞர் சொன்தாக கேள்வி.
நன்றி
வணக்கம்
1 comment:
இக்கால அன்புக்கு ஒரு நல்ல விளக்கம் கொடுத்திருக்கீர்கள். இதே போல் மீண்டும் எழுத என் வாழ்த்துக்கள்.
Post a Comment