July 17, 2012

ஜனாதிபதி மாளிகை ஒரு பார்வை.

நாட்டின் முதல் குடிமகனை தேர்தெடுக்கும் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது.இதில் ஆழுங்கட்சி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி வெற்றி பெறுவாரா இல்லை இதர போட்டியாளரான சங்மா வெற்றி பெறுவாரா என்பது தேர்தல் முடிந்த பிறகு தெரிந்துவிடும்.நாட்டின் ஜனாதிபதி என்பவர் இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு தலையாட்டி பொம்மைதான். இருந்தாலும் அவர்களுக்கான ராஜபோக வாழ்கைக்கு எந்தவித குறைவும் இருக்காது.மாத சம்பளமாக சுமார் 1,50,000 ரூபாய்களும் மற்றும் வெளிநாட்டு சுற்றுபயணங்கள்,சகல வசதிகளுடன் வீடு(ராஷ்டிரபவன்).போன்ற ஆடம்பர வாழ்கையை அனுபவிப்பார்கள்.பெயருக்காக அந்த பதவி அலங்கரிக்கப்பட்டாலும் நாட்டின் முதல் குடிமகன் என்ற பெருமை ஜனாதிபதிக்கு உண்டு.இப்படி சகல சம்பிரதாயங்களோடு வலம் வரும் ஜனாதிபதி அவர்கள் பதவியில் அமர்ந்தது முதல் அடுத்த ஐந்தாண்டுகள் வரை வசிப்பதற்காக கொடுக்கப்படும் மாளிகைதான் ராஷ்டிரபவன்.அமெரிக்காவின் வெள்ளை மாளிகை போல்.

அப்படிப்பட்ட மேன்மையான ராஷ்டிரபவனை பற்றி தினமலரில் வெளியான கட்டுரை இதோ.



இந்திய ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லம்,"ராஷ்டிரபதி பவன்' (ஜனாதிபதி மாளிகை). இது சிறந்த கட்டடக்கலை சிறப்பம்சத்தை கொண்டது. உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரின் இல்லம் இதுதான்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது, நாட்டின் தலைநகராக கோல்கட்டா இருந்தது. 1911ம் ஆண்டு டில்லிக்கு ஆங்கிலேயர் தலைநகரை மாற்றினர். அதே நேரத்தில் அதற்கான தலைமைச் செயலகம், அரசு அலுவலங்கள் அமைப்பது குறித்த ஆராய, ஆங்கிலேய அரசு, கட்டட பொறியாளர்கள் எட்வின் லேண்ட்சீர் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பாகர் ஆகியோர் தலைமையிலான குழுவை அமைத்தது.
இக்குழு தற்போதைய டில்லிக்கு அருகே 5 கி.மீ., தொலைவில் உள்ள "ரெய்சினா ஹில்ஸ்' என்ற உயரமான இடத்தை தேர்வு செய்தது. இப்பகுதியில் தான் தற்போதைய ஜனாதிபதி மாளிகை,பார்லிமென்ட், பிரதமர் அலுவலகம், மத்திய அரசு அலுவலகங்கள் ஆகிய கட்டடங்கள் உள்ளன. இது டில்லியின் மற்ற பகுதிகளை விட 741 அடி உயரமானது.
இதற்காக 1911 முதல் 1916 வரை, "1894 நிலம் கையகப்படுத்தும் சட்டம்' அடிப்படையில் 300 குடும்பங்கள் காலி செய்யப்பட்டன. 4000 ஏக்கர்நிலம் கையகப்படுத்தப்பட்டது."ஹில்ஸ்' ன் உயரமான இடத்தில் விக்டோரியா அரண்மனையும் (தலைமை செயலகம்), அதற்கு அருகே அரசு அலுவலங்களும் கட்ட திட்டமிடப்பட்டு, 1912ல் பணி தொடங்கப்பட்டது. விக்டோரியா அரண்மனை உயரமாக இருக்க வேண்டும் எனலுட்யென்ஸ் விரும்பினார். 1916ல் ஆங்கிலேய அரசு, அதிகமான நிதி செலவு செய்ய முடியாது என தெரிவித்து இவரது கோரிக்கையை நிராகரித்தது. இதையடுத்து"விக்டோரியா அரண்மனையின்' அளவை குறைத்தார். இந்திய கலாசாரமும், இக்கட்டடத்தில் இடம் பெற்றது.
கட்டத்திற்கான திட்ட மதிப்பீடு, துவக்கத்தில் 4லட்சம் பவுண்ட் என முடிவு செய்யப்பட்டு. இறுதியில் 9லட்சம் பவுண்டாக அதிகரித்தது. நான்கு ஆண்டுகளில் முடிய வேண்டிய பணி 17 ஆண்டுகள் இழுத்தது.
சிறப்பம்சம்: நான்கு மாடிகள், 340 அறைகள் இதில் உள்ளன. மொத்தம் 2 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. 70 கோடிசெங்கல், 30 கோடி கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ராஷ்டிரபதி பவன் கட்டடத்தில் இடம்பெற்றுள்ள "டூம்' வெகு தூரத்தில் இருந்த பார்ப்போரை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டது. கட்டடத்தில் உள்ள தூண்களில் "மணி' இடம் பெற்றுள்ளது. இது இந்து, புத்த, ஜெயின் சமூக மரபை பிரலிபதிப்பதாக அமைந்துள்ளது. ஆனால் இந்த"மணிகள்' கட்டடத்தின் வடக்கு பிளாக், சவுத் பிளாக் மற்றும் பார்லிமென்ட் வளாகம் ஆகியவற்றில் இடம் பெறவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்று ராஜாஜி இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக பதவியில் இருந்த போது, அவர் பயன்படுத்திய அறைகள், தற்போது வெளிநாட்டு தலைவர்கள் சந்திக்கும் இடமாக விளங்குகிறது.
இரண்டு இடங்கள்: முகுல் கார்டன், ஹெர்பல் கார்டன் ஆகிய தோட்டங்கள் ராஷ்டிரபதி வளாகத்தில் அமைந்துள்ளன. டில்லியைத் தவிர, சிம்லா (வடக்கு) மற்றும் ஐதராபாத் (தெற்கு) ஆகிய இடங்களில் ஜனாதிபதிக்கான"ராஷ்டிரபதி நிலையம்' அமைந்துள்ளது.







மேலும் ஒரு தகவல்.



ஜனாதிபதி தேர்தல் என்பது மறைமுக வாக்கெடுப்பு மூலம் நடைபெறுகிறது.இதிலும் பல புரியாத புதிர்கள் இருக்கின்றன அவற்றைப் பற்றி தெரிந்த கொள்ள கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்.

நாட்டின் முதல் குடிமகனை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறார்கள் ஒரு பார்வை.

1 comment:

uiniseyackley said...

Best Casino Slots - Las Vegas, NV - MapYRO
Free 동해 출장안마 Slot Machine Games with Free Spins 남양주 출장마사지 at Casino 대전광역 출장샵 Vegas. Explore Las Vegas Strip Casino Slots 김제 출장샵 for fun and win cash prizes! 안성 출장마사지