free mail

November 24, 2011

ஊழல் அரசியல் வாதிகளே ஜாக்கிரதை.

இதுவரை தலைவர்கள் மீது கோபத்தையோ எதிர்ப்பையோ காட்ட அவர்களைப்பற்றி கேவலமாக திட்டுவார்கள் அல்லது கையில் கிடைத்த கல்லோ மண்ணோ ஏன் காலணியாகக் கூட இருக்கலாம் இது போன்ற ஆயுதங்களை உபயோகிப்பார்கள். இது நேற்று வரை இன்று முதல் புது முயற்சியாக ஒண்டிக்கொண்டி நேரடித்தாக்குதல்தான் அப்படி சமீபத்தில் தாக்கப்பட்டவர் இந்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார்.முதுகில் ஒரு உதையோ நெஞ்சில் ஒரு குத்தோ வாங்கிக் கொள்ளலாம்.ஆனால் கன்னத்தில் வாங்கிக் கொள்ளும் அறையென்பது மேலே குறிப்பிட்ட இரண்டு தாக்குதல்களையும் விட கொஞ்சம் அவமானம் அதிகம்.இந்த அவமானகர செயலை சரத்பவாருக்கு எதிராக நிகழ்த்தியிருப்பவர் ஹர்விந்தர் சிங் என்ற இளைஞர்.


மனதில் எவ்வளவு தைரியமும், கோபமும் இருந்திருந்தால் இந்த செயலை செய்திருப்பார்.தாக்குதலுக்கான காரணமாக ஹர்விந்தர்சிங் கூறியதாவவது.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் சரத்பவாரே காரணம் என்றும்,
சரத்பவாரை கொல்லதான் நினைத்தேன் என்று கூறிய அவர் மேலும் விளம்பரத்துக்காக அவர் கன்னத்தில் அறையவில்லை. என்றும், நாட்டின் எல்லா பகுதிகளிலும் ஊழல் தலை விரித்து ஆடுகிறது. அதை தன்னால் பொறுத்தக் கொள்ள முடியவில்லையென்றும் ஆவேசமாக கூறினார்.
இறுதியில் தன் கையையும் கத்தியால் கிழித்துக்கொண்டார்..
இதே ஹர்விந்தர் சிங்தான் ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராம் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நமக்கும் இதுபோல சில அரசியல்வாதிகளை மூக்கில் குத்த வேண்டும் என்று ஆசை இருக்கும் .நிறேவேறாத ஆசை என்று தெரிந்தே ஆசைப்படுவோம்.ஆனால் ஹர்விந்தர்சிங் போன்ற ஒரு சிலர் தங்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளின் கொடுமைகளை சட்டை செய்யாமல் உச்சபட்ச தைரியத்துடன் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

இந்த செயல் மாற்றுக் கருத்தே இல்லாத தவறான செயல்தான் என்பதில் ஐயமில்லை.லட்சகணக்கான மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஒரு மத்திய அமைச்சரை பொது இடத்தில் தாக்குவது என்பது ஜீரணித்துக் கொள்ள முடியாத விசயம்தான்.பாவம் ஹர்விந்தர் சிங் தன் எதிர்ப்பைக் காட்ட இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை போலும்.ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே போன்றோர் மக்களை திரட்டி போராடுகிறார் என்றால் ஹர்விந்தர்சிங் போன்ற சிலர் தனிமனிதராக களத்தில் இறங்கி ஆபத்தை சந்திக்கிறார்கள். ஹர்விந்தர் சிங்கை நினைத்து உள் மனதில் ஓரமாக பாராட்டினாலும்,அவரின் செயலுக்காக கிடைக்கும் துன்பங்களுக்கு வெளிப்படையாக பரிதாபப்படத்தான் முடிகிறது.
சரத்பாவர் பற்றி,


மூன்று முறை மஹாராஷ்டிர மாநில முதல்வராக இருந்துள்ளார்.2005 முதல் 2008 வரை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பொறுப்பில் இருந்திருக்கிறார்.பல முறை மத்திய அமைச்சர் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.இந்தியாவின் டாப் ஊழல்களான முத்திரை தாள் மோசடி முதல் தற்போதுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வரை இவரது பெயர் அடிப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


என்னுடைய சந்தேகம்.


இது போன்ற செயல்கள் ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்குமா அல்லது இதெல்லாம் அரசியல்ல சாதரணமப்பா என்று எடுத்துக்கொள்வார்களா?ஹர்விந்தர் சிங்கின் தாக்குதலுக்கு எதிராக நிறைய அரசியல் வாதிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.நாளை அவர்கள் மூஞ்சியுலும் யாராவது கை வைத்து விடுவார்கள் என்ற பயமாக இருக்கலாமோ?

2 comments:

vivek kayamozhi said...

உண்மையிலே ஹர்வீந்த்ர் ஒரு ஹீரோ தான், சந்தேகமே இல்லை. ஊழல் பெருச்சாளி சரத் பவார் போன்ற முதலைகளை அடித்து துரத்தி அரசியல் சாக்கடையை சுத்தம் செய்யாவிட்டால் நாட்டில் தீவிரவாதமே வெடிக்கும். இந்த மாதிரி மோசடி பேர்வழிகளை மக்கள் பிரதிநிதி, ஓட்டு போட்ட மக்களுக்கு மரியாதை என்று சொல்லி ஆதரிக்க முடியாது.
ஒன்னு ஹசாரே பின்னாடி போகணும், இல்ல ஹர்வீந்தர் மாதிரி ஆகணும், மண்ணு மாதிரி சும்மா இருந்தா நம்மையும் வித்துட்டு போய்டுவானுக வெளிநாடுகளுக்கு .... ஹர்வீந்தர் ஒரு பகத் சிங், வீர வாஞ்சி மாதிரி போராளி தான்.

ilavarasan said...

விவேக்...உங்கள் வருகைக்கு நன்றி.போகிற போக்கைப் பார்த்தா நீங்கள் சொல்வது போல்தான் நடக்கும் போல் தெரிகிறது.