November 9, 2011

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கூடங்குளம் அணு உலை.

அணு எதிர்ப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில், கூடங்குளம் அணு உலை, ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. ராணுவத்தின் முப்படைகள், மத்திய தொழில் பாதுகாப்புப் படைகள், இந்திய கடலோர காவல் படைகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன.



அணு உலையை மூடக்கோரி, இடிந்தகரை சர்ச் வளாகத்தில், ஒரு குழுவினர் போராட்டம் நடத்துவதால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், கூடங்குளம் அணு உலைக்கு, சர்வதேச அளவிலானஅச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே, கூடுதல் பாதுகாப்பு வழங்க, பிரதமர் அலுவலகம் மூலம், ராணுவத் துறையிடம், இந்திய அணுசக்தி கழகம் கேட்டு கொண்டதன்படி, கூடங்குளம் அணு உலை, ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.




இந்திய ராணுவத்தின் மூன்று படைகளும், களத்தில் இறங்கியுள்ளன.புனேவிலுள்ள தரைப் படையின், தெற்கு மண்டல தலைமை அலுவலக உத்தரவுப்படி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட சென்னையிலுள்ள, தென் மாநில தலைமை ராணுவ அதிகாரி மேற்பார்வையில், கூடங்குளம் அணு உலை பாதுகாப்பில், தரைப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கொச்சியை தலைமையிடமாக கொண்ட, தென்னிந்திய கடற்படை (நேவி) தலைமை அட்மிரல் சுதர்சன் ஸ்ரீகாந்த் மேற் பார்வையில், கூடங்குளம் உலையைச் சுற்றியுள்ள இந்திய கடற்பகுதியில், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில், கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், ராடார் கருவி கண்காணிப்பு, கடற்பகுதி கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்ட, தெற்கு மண்டல விமானப் படையினரும், கூடங்குளம் அணு உலை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். போர் விமானங்களும், ஏவுகணை சுமந்த விமானங்களும், அணு உலையின் எல்லையைச் சுற்றிய கடற்பகுதிகளின் மீது, பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, அணு உலை வளாகத்தில், கடலோர காவல்படையின் போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, அனைத்து நவீன தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர, ரகசிய வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டு, அணு உலை மற்றும் அதன் சுற்றுப்புறகடற்பகுதிகள் கண்காணிக்கப்படுகிறது. பாதுகாப்பு கருதி, உலையைச் சுற்றியுள்ள மொபைல்போன் டவர்களும் கண்காணிக்கப்படுகின்றன.அணு உலைக்கு வெளியிலும், நிலப்பகுதிகளிலும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், தீவிர பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அணு உலையின் கட்டுப்பாட்டு அறை, எரிபொருள் பகுதி உள்ளிட்டஅனைத்து முக்கிய இடங்களின் பாதுகாப்பும், ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, இந்திய அணுசக்தி கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

செய்திகள்.www.dinamalar.com



இது போராட்டக் குழுவினரை பயமுறுத்தும் முயற்சியா இல்லை நிஜமாகவே அணு உலைக்கு முப்படைகளின் பாதுகாப்பு தேவையா? ஒவ்வொருவரும் விதவிதமான கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இதில் எந்த கருத்தை நம்புவது ,யாரை பின்பற்றுவது குழப்பம்தான் மிஞ்சுகிறது.
அந்நியசக்தி சதி என்கிறார்கள்,பணம் வாங்கிக் கொண்டு போராட்டம் நடத்துகிறார்கள் என்கிறார்கள்,மக்கள் அறியாமையால் போராடுகிறார்கள் என்கிறார்கள்.அப்துல் கலாம் அவர்கள் அணு உலையால் எந்த ஆபத்தும் இல்லை என கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக உறுதியாக சொல்கிறார்.மத்திய அரசு எது வந்தாலும் ஒரு கை பார்க்கலாம் என்ற முடிவோடு இருக்கிறது.இதில் வேறு ஆய்வு செய்வதற்கு பத்து இருபது குழுக்கள் வேறு. உலகத்திலேயே ஆய்வு செய்வதற்கென்று அதிக குழுக்களை நியமனம் செய்தது கூடங்குளம் அணு உலைக்காகத்தான் இருக்கும்.


இறுதியில் எனக்கு தோன்றுவது.ஐயோ சாரே கன்பியூஸ் ஆயிட்டாரே

1 comment:

சி.பி.செந்தில்குமார் said...

இறுதியில் எனக்கு தோன்றுவது.ஐயோ சாரே கன்பியூஸ் ஆயிட்டாரே>
>>>>
அப்பிடியா அவ்வ்வ்வ்வ்வ்