December 9, 2011

உலகக் கோப்பையை வென்ற அணிகள் ஒரு பார்வை.

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி ஆனால் இந்திய மக்களால் அதிகம் ரசிக்கப்படும் விளையாட்டு கிரிக்கெட்.ஐந்து வயது சிறுவன் முதல் எண்பது வயது முதியவர் வரை என அனைத்து தரப்பினரையும் தன்னுடைய ரசிகர்களாக வைத்திருக்கிறது கிரிக்கெட்
.



கிரிக்கெட்டை கண்டு பிடித்து பல ஆண்டுகள் வரை டெஸ்ட் போட்டிகள்தான் நடைபெற்றன.1970 களில்தான் ஒரு நாள் போட்டிகள் அறிமுகப் படுத்தப்பட்டன.1975 ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி துவங்கப்பட்டது.இதன் பின்னர்தான் கிரிக்கெட்டிற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.இது வரை மொத்தம் பத்து முறை உலககோப்பை போட்டிகள் நடந்துள்ளன.அதில் வெற்றிப் பெற்ற அணிகளின் சிறு பட்டியல் இதோ.





1975 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற முதல் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின இதில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிப் பெற்றது.போட்டி விவரம்.மே.தீ.291/ 60 ove 8 விக்.

ஆஸ்.274/58.4 overs all out.






1979 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் மீண்டும் மேற்கிந்திய தீவு அணி வெற்றி வாகை சூடியது.இது இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் கிடைத்த வெற்றியாகும்.போட்டி விவரம்.

மே.தீ.286/60 overs . 9 Wickets


இங்கி: 194/51 overs all out







1983 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைப்பெற்ற போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்து வெற்றி வாகை சூடியது.

போட்டி விவரம்.
இந்தியா:183/54.4 overs all out


மே.தீ:140/52 overs all out






1987 ல் நடைப்பெற்ற உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவும் , பாகிஸ்தானும் இணைந்து நடத்தின.இத் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும் இங்கிலாந்து அணியும் மோதின இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப் பெற்றது.

போட்டி விவரம்.
ஆஸ்: 253/50 overs 5 Wickets


இங்கி: 246/50 overs 8 Wickets




1992 ஆம் ஆண்டு நடைப்பெற்ற போட்டிகளை ஆஸ்திரேலியாவும் , நியூசிலாந்தும் இணைந்து நடத்தின.இத்தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிராக வெற்றிப்பெற்றது.போட்டி விவரம்.பாகி: 249/50 overs 6 Wickets


இங்: 227/49.2 all out




1996 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை போட்டிகளை இந்தியா , பாகிஸ்தான் , இலங்கை ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தின.இத்தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி ஆஸ்திரேலிய அணியை வென்றது.
போட்டி விவரம்.ஆஸ்: 241/50 overs 7 Wickets


இலங்: 245/46.2 overs 3 Wickets




1999 ல் இங்கிலாந்தில் நடைப்பெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது.

போட்டி விவரம்.ஆஸ்: 133/20.1 overs 2 wickets


பாகி:132 All out 39 Overs




2003 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைப்பெற்ற உலகக்கோப்பை போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி தோல்வியை பெற்றது.

போட்டி விவரம்.
ஆஸ்: 359/ 50 overs 2 wickets


இந்தியா: 234 All out in 39.2 Overs





2007 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடைப்பெற்ற உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியை வீழ்த்தி நான்காவது முறையாக கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.
போட்டி விவரம்.
ஆஸ்.281/ 38.0 overs 4 wickets


இலங்.215 /36.0 overs 8 wickets .





2011 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியா , இலங்கை , வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்றது.மும்பையில் நடைப்பெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலக கோப்பையை வென்றது.

போட்டி விவரம்.
இந்தியா.277/48.2 overs 4 wickets;


இலங்.274/50 Overs 6 wickets,

No comments: