April 7, 2015

பொங்கும் செம்மரம் ...

ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட இருபது பேர் சுட்டுக்கொலை .அதில் சுமார் பனிரெண்டு பேர் தமிழர்களாம் .அதனால் சிலபல மனித உரிமை ஆர்வலர்களும்.சமூக போராளிகளும் இந்த அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்களாம்.தவறு எவர் செய்தாலும் தவறுதான் அதில் கூடுதல் குறைவு என்ற வாதத்திற்கே இடமில்லை .அதனால் தமிழன் தவறு செய்தால் தவறு சரியாகாதுதானே .அப்படி இருக்கையில் ஒரு அரசின் எச்சரிக்கையையும் அவமதித்து அங்கு கண்காணிப்புக்கு இருந்த அதிரடிப்படை வீரர்களுக்கும் கட்டுப்பட மறுத்தவர்களை தாக்குவதை தவிர வேறு உபயம் இருந்திருக்க முடியாது .துரதிர்ஷ்டவசமாக இருபது பேர் மரணித்தது வேதனைக்குரியதுதான் .இங்கு திருட்டு பெரிய குற்றமல்லதான் .ஆனால் தேசத்துரோகம் பெரிய குற்றம்தானே ..அரசையும் இயற்கையையும் மதிக்காதவர்களுக்கு இந்த சம்பவம் ஒருபாடமாக அமையலாம் .நம்ம ஊர்ல இந்த பிக்பாக்கட் அடிக்கிறவன் ,தாலி அறுப்பவன்,வீடேறி திருடுபவன் இவர்களல்லாம் தங்கள் வயிற்றுக்காகவும் வாழ்க்கைக்காகவும்தான் திருடுகிறார்கள். அவர்களும் தமிழர்கள்தான் .ஆகவே எதிர்பாரமால் அகப்பட்டுவிட்ட திருடனை அவன் உடல் நோகாமல் காவல் துறையினரிடம்  ஒப்படைத்துவிடுவீர்காளா ...?மரண அடி கொடுத்தல்லவா காவல் துறையினரிடம் ஒப்படைப்போம் ...நம் மனித நேயம் அப்படி இருக்க எங்கோ நடந்த சம்பவத்திற்கு போராளி என்ற பெயரில் நம்மை விளம்பரப்படுத்திக்கொண்டிருக்கிறோம் ..காரணம் தமிழன் தாக்கப்பட்டானாம் .நாம் பொறாமையோடு எதிர்கொள்ளும் அடுத்த வீட்டுக்காரனும் தமிழன்தான் அவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் ஏன் நம் நெஞ்சு இவ்வளவு பொங்குவதில்லை .காரணம் வீம்பு ,கர்வம் ,எரிச்சல் போன்ற இத்யாதி இத்யாதி சமாச்சாரங்கள்தான் .எப்போதும் நாம் கண்ணுக்கு தெரியாதவனை மட்டும்தானே  கொண்டாடுவோம் .அதுபோல் கண்ணில் அகப்படாமல் தொலைவில் உள்ளவன் பெயரிலும் பரிவு கொள்கிறோம் .அந்தப் பரிவு ஒரு விளம்பரத்துக்காக மட்டும் இல்லாமல் இருப்பது வரை நல்லது ...
.
.
தோன்றியது  ...

January 26, 2015

ஐ விமர்சனம் ..

ஐ விமர்சனம் ...

.
.
இந்தப்  படத்தின் ஓட்டைகளை விமர்சிப்பதா அல்லது ஓட்டைகளையே மறக்கடிக்கவைக்கும் ஏனைய பிரம்மாண்ட காட்சிகளை சிலாகித்து விமர்சிக்கவா ...எதுவும் முடியாது .ஏன்னா படம் என்னை  மெர்சலாக்கிடிச்சு  ....
விக்ரம் -நடிகன்டா நீ....
.
சங்கர் -உங்கள் படைப்பாளுமைக்கு  நாங்கள் தலை வணங்குகிறோம் .அல்லது நான் ....
.
ரவிச்சந்திரன் -சார் நீங்க நிஜ ஹீரோ ....
.
ரகுமான் -உலகறிந்ததாயிற்றே ..
.
ஏனைய மற்ற கலைஞர்களுக்கும் நன்றிகள் ...
.
முடிவா ஒண்ணே ஒண்ணு ..
அதாவது மேஜிக்குல யாரும் லாஜிக் பார்ப்பதில்லை .அதை எப்படி சாதித்தார்கள் என்றுதான் யோசிப்போம் .அதே மாதிரிதான் ஐயும் எப்படி இப்படி படைத்தார்கள் என்று யோசிப்போம் .ரசித்துவிட்டு வரலாம் ...
.
ஐ லைக் ஐ.....

December 18, 2014

லிங்கா எனது பார்வையில் ..

லிங்கா .....
.
என் பார்வையில் ......
.
.
இந்த திரைப்படத்தின் நாயகனாக என் கண்முன்னே விரிவது ஒளி இயக்குநர் ரத்னவேலுதான் ...ப்ப்ப்ப்பா என்ன ஒரு கேமரா விளையாட்டு . சூப்பர் ..
.
அடுத்தது கலை இயக்குநர். அருமையான வேலைப்பாடுகள் அதுவும் கடின உழைப்பின் பிரதிபலிப்பு கண் கொட்டாமல் ரசிக்கவைக்கிறது .கலைக்கும் ஒளிக்கும் கொஞ்சம் மூளையாக இருந்த இயக்குனர் ரவிக்குமார் அவர்களுக்கு மிகுந்த நன்றிகள் ..
அவருக்கு இந்த இரண்டு துறை சார்பாகத்தான் நன்றியோ பாராட்டோ தெரிவிக்க முடியும் .ஏனையவை ஏனோதானோதான் ..இசையைப் பற்றி இப்போது பேசத்தேவையில்லை ஏன்னா முன்பே அறிந்துதான் பாடல்கள் அத்தனையும் அருமை .பின்னணி இசையும் அருமைதான் ....
.
ரஜினி ...
.
மாற்றம் மட்டுமல்ல தலைவரும் மாறமாட்டார் போல பழைய பல்லவியை மீண்டும் பாட முயற்சித்துக்கொண்டிருக்கிறார் ..குரல் கரகரத்து விட்டது என்பது ரசிகனான எங்களுக்கு வருத்தமே ...அமிதாப்பின் காலில் விழுந்தால் மட்டும் போதாது .அவர் கைப்பிடித்து அவர் பாதையில் கொஞ்சதூரமேனும் பயணப்பட்டால் ரஜினி என்ற  மாஸ் கலையாமலிருக்கும் என்பது என் எண்ணம் ....
.
ரஜினியின் எந்த திரைபடத்தையும் பார்த்தாலும் முன்பே பார்த்திருந்தாலும் ஒரு சில காட்சிகளாவது ரஜினி  என்னை சிலிர்க்க வைப்பார் .அதுவும் மீண்டும் மீண்டும் அதே காட்சிகளை பார்த்தாலும் .ஆனால் இந்த திரைப்படத்தில் ரஜினியோ ரவிக்குமாரோ அந்த வாய்ப்பை எனக்கு தரவில்லை ..வருத்தம்தான் போகட்டும் .பிரம்மாண்ட காட்சிகளால் கவர முயற்சித்துவிட்டு ..காட்சி அமைப்பதில் கோட்டை விட்டுவிட்டார் இயக்குநர். ஓட்டையாக...சிலபல நகைச்சுவை காட்சிகள் ரசிக்கும்படியாவே இருந்தது அதுவும் ரஜினியின் தோஸ்தான பாம்பு நகைச்சுவை அட்டகாசம் போங்க ..என்னா முகபாவம் சூப்பர் .கூடவே சீரியசான காட்சிகளும் சிரிப்பை வரவழைத்ததுதான் சோகம் ....
இப்படி பழைய ரஜினியை ரசிக்க முடியாமல் மனம் இரண்டுபட்டு கிடந்தவேளையில் ஒரே நிவாரணமாக வந்தார் அனுஷ்கா ....(பாஸ் அது நிர்வாணம் இல்ல நிவாரணம் )அவரைப்பார்த்து மனம் பெருத்த ஆறுதலடைந்தது ..இரண்டு திரைப்படத்தில் இரண்டான மனசு லிங்காவில் நாலானது ம் அவ்வளவு அழகு ....நடிப்பும் அழகுதான் ...
..
சோனாக்சி .....நல்லா நடிக்குறாங்க ...ஆனா நடனம்தான் ப்ப்ப்பா சகிக்கல ...
.
சந்தானம் ...
மணமில்லாத சந்தணம் ஆயிட்டார் ...
.
ஜெகபதிபாபு ....
அழகான மொக்க வில்லன் ..மொக்கையாக்கிட்டாங்க ...
.

.ரவிக்குமார் ....

கதை திரைக்கதை இயக்கம் ..மூணுமே சறுக்கல்தான் ..ரசிக்க முடியல ....ரஜினி நடித்த திரைப்படங்களிலேயே இந்த திரைப்படத்தில்தான் அவருக்கு மிக அதிகமான டூப் பயன்படுத்தியதற்காக ரவிக்குமாருக்கு மிகப்பெரிய கொட்டு ..காட்சிகளே கெட்டுப்போச்சு ......
.
இப்படி பல குறைகளும் சில நிறைகளும் இருந்தாலும் மீண்டும் இந்த திரைப்படத்தை பார்க்க விரும்புவேன் ..ஏன்னா நான்  ரஜினி ரசிகன் .....
.
..
மொத்தத்தில் லிங்கா கறுப்பு காகிதத்தில் வெள்ளைப்புள்ளி ......

November 4, 2014

கடன் ஓர் கடன்

நம்ம அண்ணன் ஒருத்தர்ட்ட...

அண்ணே எனக்கு அவசரமா பத்தாயிரம் ரூபாய் தேவைப்படுது யார்கிட்டயாவது வட்டிக்கோ அல்லது டெய்லி சீட்டுக்கோ வாங்கித்தர முடியுமா என கேட்டேன் ..கடனாய் கேட்டாலும் தரமாட்டார்கள் என்பதால்தான் வட்டி என்ற பிட்டை போட்டேன் )
நொடி கூட தாமதிக்காம உடனே சொன்னார் .என்னது வட்டிக்கு காசா டேய் நாங்க எல்லாம் வாங்கிட்டு படுகிற அவஸ்த்தை எங்களுக்குதான் தெரியும் .எக்காலத்திலையும் வட்டிக்கு வாங்கும் எண்ணத்தை மட்டும் விட்டுவிடு என சீரியசாவே சொல்லி முடிச்சார் ..
.
நான் குழம்பிட்டேன் நம்ம நல்லதுக்குதான் வாட்டிக்கு வாங்க வேணாம்னு சொல்றாங்களா ..அல்லது நம்மேல் கொண்ட அதீத நம்பிக்கையின் பிரதிபலிப்பே இந்த நிராகரிப்பாய் இருக்குமா என குழம்பித்தான் போனேன் ..
இருந்தாலும் ...
அண்ணே எனக்கு ரொம்ப தேவை இருக்குண்ணே அதனால ஐந்தாயிரம் ரூபாய் கடனுக்காச்சும் கொடுண்ணே என்று கேட்டேன் ....
.
கொஞ்சமா திகைத்த முகத்தோடு சொன்னார் ....
வாய்ப்பே இல்லயப்பா ஏன்னா போனவாரம்  வட்டிக்கு வாங்குன  பத்தாயிரம் ரூபாய் சாயங்காலம் திருப்பி கொடுக்கணும் இப்போ ஐந்தாயிரம் ரூபாய்தான் இருக்கு மீதி ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஓடிட்டு இருக்கேன் ...இதுல நாளைக்கு ஒருத்தருக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுக்கணும் ...அடுத்வாரம் இன்னும் ஒருத்தருக்கு ...
.
அண்ணே போதும்ணே இதோட நிறுத்திரு .உன்கிட்ட கடனுக்கும் கேட்கல வட்டிக்கும் கேட்கல .....போட்டா ..
.
ஹலோ நான்தான்டா எனக்கு அவசரமா ஒரு ஐந்தாயிரம் ரூபாய் தேவைப்படுது ....
.
டேய் மச்சான் நானே உன்கிட்ட கேக்கலாம்னு இருந்தேன்டா ... ...
.
அவன் பேசுனது பிறகு எனக்கு கேக்கவே இல்லை ...கட் பண்ணிட்டேன் அழைப்பை ......
.

November 3, 2014

சில்லரை

சினிமாவில் யதார்த்தத்தை மீறிய சில காட்சிகள் நிஜ வாழ்க்கையில் நடக்கும்போது மிக சுவாரஸ்யமாகிவிடுகிறது ... அப்படிதான் இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தையில் வெட்டியாக நின்று கொண்டிருந்தபோது ஒரு குடிகார பிச்சைக்காரர் ஒரு பக்தி கானத்தை மிகுந்த உச்சக் கூக்குரலில் பாடி பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார் .அவர் பாடும் தோரணையும் வித்தியாசமான பாவனையும் என்னை கவர்ந்ததால் அவரை கவனித்துக்கொண்டிருந்தேன் ...அவரும் நான்கைந்தை வரிகளை மட்டும் மீண்டும் மீண்டும் பாடியவாறே நான் நின்றிருந்த கடைக்கருகே வந்து மீண்டும் முதல் வரியிலிருந்து பாட ஆரம்பித்தார் ..கடைக்கு காய்கனி வாங்கவந்தவர்கள் பாடக பிச்சைக்கரரின் குரலின் உச்சநிலையைக் கண்டு அதுவும் செவிப்புறமாய் பாடும்போது மிரண்டுதான் போனார்கள் ...இதைப்பார்த்த கடை முதலாளிக்கு சிறிது கோபம் வந்துவிட்டது .இருந்தாலும் வெளிக்காட்ட முடியாத சூழ்நிலையாதலால் அமைதியாக இருந்துவிட்டார் ..பாடகரும் பாடிய நிலையிலேயே மூன்று முறை கையேந்தி விட்டார் ..முதலாளி கண்டுகொள்வதாக இல்லை ..மீண்டும் பாடகரின் ஒருசில முயற்சிச்சிக்குப் பின் முதலாளி வாயைத் திறந்து சில்லறை இல்லை என்று மூஞ்சை கோணலாக வைத்துக்கொண்டே சொன்னார் ...கொஞ்சமும் அலட்டாத பாடகர் பாடிபடியே இந்தாங்க எடுத்துக்கோங்க என்று தன் தட்டை முதலாளி முன் வைத்தார் ...... அப்படியே முதலாளி அதிர்ச்சியாயிட்டாரு.. சுத்தியிருந்த நாங்களும்தான் ...சில வினாடிகளுக்குப் பிறகு சாவதனாமாக பாடகர் சொல்கிறார் சில்லறை எடுத்துக்கோங்கன்னு சொல்லவந்தேன் அப்படி என்று விட்டு மீண்டும் பாட ஆரம்பித்து விட்டார் ..அவர் பாடலை ஆரம்பிக்கவும் நான் சிரிக்க ஆரம்பிக்கவும் சரியாய் இருந்தது..அதுவும் பலமாக சிரித்தேன் என் கூட துணைக்கு சிரிக்கவும் ஒருசிலர் இருந்தனர் ....இப்போது முதலாளிக்கு பிச்சைக்காரனை மறந்துவிட்டார் என்னை முறைக்க ஆரம்பித்தார் ..நான் இன்னும் பலமாக சிரித்தேன் .அவர் கோ ப ப்டவில்லை அவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டார் ..... . ஆனா பிச்சைக்கார பாடகருக்குதான் காசு கிடைக்கவில்லை ..பிறகு நான்தான் என்கிட்ட சில்லரை இல்லையென சொல்லி வேறு ஒருவரிடம் ஒரு ரூபாய் கொடுக்க சொன்னேன் .....
.
நான் கொடுக்க சொல்லவில்லை என்றால் என்னையும் எடுக்கச்சொல்லியிருப்பார் ...........சில்லரை ......

November 2, 2014

ஆங்கிலம் கற்பதற்கு ஓர் வியாபாரக்கூடம்

எட்டு வயது குழந்தையுடன் ஒரு உரையாடல் ....
உன் பெயரென்னம்மா ....
.
கிப்சிகா ...
.
எத்தனாவது வகுப்பு படிக்குற ..
.
மூணாவது...
.
எந்த பள்ளிக்கூடம் ..
.
ஏபிஜெஎம்..காக்காவிளை ..
.
உன்னுடைய வகுப்பில் மொத்தம் எத்தனை பேர் ..
.
பதினான்கு ..
.
சரி திருக்குறள் தெரியுமா ..
.
தெரியும் ..
.
எத்தனை ..
.
ஒன்று ..
.
ஒண்ணுதான் தெரியுமா ..
.
ஆமா ..
.
மொத்தம் எத்தனை திருக்குறள் உண்டுனு தெரியுமா ...
.
தெரியாது ...எங்களுக்கு சொல்லிதரல ..
.
தமிழ் பாடம் நடத்துவாங்கதானே ..
.
ஆமா ஒரு பிரீயடு மட்டும் ...
.
சரி உங்க பள்ளிக்கூடத்தில் இங்கிலீஷ்ல பேசுவீங்களா தமிழ்ல பேசுவீங்களா ...
.
தமிழ் பிரீயடை தவிர மத்த நேரம்லாம் இங்கிலிஷ்லதான் பேசனும் மீறிப் தமிழ்ல பேசுனா பைன் போடுவாங்க ..சில நேரம் அடிக்கவும் செய்வாங்க ...
.
ஐயையோ ரொம்ப அநியாயமா இருக்கே ..
.
ம்.
.
வீட்ல அப்பா அம்மாகிட்ட பள்ளிக்கூடத்துல இந்த மாதிரி தண்டனை தராங்கன்னு சொன்னியா ...
.
சொன்னேன் அவங்க ஒண்ணும் சொல்ல ..
.
உனக்கு தமிழ்ல பேசி தண்டனை கிடைச்சுருக்கா..
.
ஆமா ஒருதடவை ....
.
உனக்கு இங்கிலீஷ்ல பேசுறது பிடிக்குமா தமிழ்ல பேசுறது பிடிக்குமா ...
.
தமிழ்ல பேசுறதுதான் பிடிக்கும் ...
.
ஓ செல்லம் சூப்பர் ..
.
சரி தமிழ்ல பேசுனா தண்டனை பள்ளிக்கூடத்தை அடிச்சு உடைச்சுரலாமா ...
.
குறு குறுவென என் முகத்தைப் பார்த்துவிட்டு ..உங்களால் அது முடியாது என்றாள் ....
நானும் அதோடு பேச்சை நிறுத்திவிட்டேன் ....புள்ள கடைசி பதிலை சரியாதான் சொல்லிருக்கா ......
இந்த நிகழ்ச்சியை நாளைக்கு அல்லது அடுத்த நாளோ நாலுபேரிடம் பேசிட்டு இருக்கும்போது பொங்குவேன் அடுத்ததான் நான் என்  வேலையைப் பார்க்கப் போய்விடுவேன் ...மிகச் சாதாரண சாமான்யனின் கோபம் எதிர்த்து பிரச்சினை செய்யாத நாலுபேரோடு முடிகிறது ......