Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

February 3, 2014

விழிப்புணர்வு பிரச்சாரம் இப்படியும் செய்யலாம்.

நெல்லையச் சார்ந்த சங்கர நாராயணன்,அனுபாரதி என்ற புதுமண
தம்பதியினர்.தங்கள் திருமணம் முடிந்த அடுத்த பதினயிந்தாவது நிமிடத்தில்
திருமண மண்டபத்திலேயே ரத்ததானம் வழங்கினர்.மணமக்களை வாழ்த்த வந்த
ஐம்பதுக்கும் மேற்பட்ட சுற்றமும் கூடவே ரத்ததானம் வழங்கி தங்கள் வாழ்த்தை
தெரிவித்தனர்.
.
.
அவர்கள் மணமக்களல்ல மனமக்கள்...

தகவல் மற்றும் புகைப்படம்.
ONEINDIATAMIL

September 12, 2011

பயமாக இருக்கிறது,முதல்வர் ஜெயலலிதா......

இந்த அரசின் 100 நாள் சாதனைகளுக்காக அனைத்து க் கட்சியினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.இதுமகிழ்ச்சியை விட அச்சத்தைத்தான் தருகிறது. இந்த 100 நாட்கள் பணிகளை மிஞ்சுகின்ற அளவுக்கு எங்கள் அரசின் பணிகள் இருக்க வேண்டுமே என்ற உணர்வுதான் எழுகிறது, என முதல்வர் ஜெயலலிதா கூறினார். அனைத்துத் தமிழக மக்களின் மகத்தான ஆதரவோடு கடந்த 3 மாதங்களுக்குமுன்பு அமைய பெற்ற அதிமுக தலைமையிலான அரசு தன் பணியில் 100 நாட்களை இன்றுடன் நிறைவு செய்கிறது. இதை யொட்டி சட்டமன்ற கட்சி தலைவர்களும்,உறுப்பினர்களும் பாராட்டு தெரிவித்தார்கள். இங்கே பேசியவர்கள் பாராட்டு தெரிவித்த போதுஅது வெறும் சம்பிரதாய பாராட்டு போல எனக்கு தோன்றவில்லை.ஒவ்வொருவர் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து வந்த உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.



இந்த பாராட்டுக்களை கேட்கும் போது எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதை விட ஒருவித லேசான அச்ச உணர்வுதான் தோன்றியது.100 நாட்கள் முடிந்த பின்னணியில் பேசிய ஒவ்வொருவரும் குறை ஏதும் சொல்லாமல் முழு மனதோடு பாராட்டியிருக்கிறார்கள்.


இது தொடர்ந்து நீடித்திருக்க வேண்டுமே என்கிற அச்ச உணர்வும் இன்னும் வருகிற, பலப்பல100 நாட்களுக்கும் ஓராண்டு,இரண்டாண்டு என ஐந்து ஆண்டுகள் நிறைவு பெறும் வகையிலும் இந்த 100 நாட்கள் பணிகளை மிஞ்சுகின்ற அளவுக்கு எங்கள் அரசின் பணிகள் இருக்க வேண்டுமே என்ற உணர்வுதான் எழுகிறது.


தொடர்ந்துஉறுப்பினர்கள் பாராட்டக் கூடிய அளவுக்கு நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டுமே,அது ஒரு மிகப்பெரிய சவாலாக அமையுமே என்கிற உணர்வுதான் எனக்குள் எழுகிறது.ஆனாலும் உங்கள் அனைவரின் நல்வாழ்த்துக்களுடனும்,ஆதரவுடனும் இதை சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்.நாங்கள் எதை செய்தாலும் உள்ளத் சுத்தியோடு செய்வோம்.மக்களை ஏமாற்றுகிற எண்ணம் எங்களிடம் கிஞ்சிற்றும் இல்லை.



கடந்த திமுக ஆட்சி காலத்தில் கேஸ் அடுப்பு வழங்கினார்கள்.ஒரு சிலருக்கு வழங்கி விட்டு அதற்கான சிலிண்டர் தரவில்லை. விவசாயிகளுக்கு மின் இணைப்பு தந்தார்கள்.ஆனால் மின்சாரம் தரவில்லை.அப்படி நாங்கள்மக்களை ஏமாற்றுகிற எதையும் செய்யமாட்டோம்.அத்தகைய எண்ணம் எங்களிடம் இல்லை.உள்ள சுத்தியோடும்,கர்ம சிரத்தையோடும் செய்வது தான் எங்கள் ஆட்சியின் நிலை. இந்த நேரத்தில் தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இப்பொழுது ஒரு உண்மையை நான் உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

ஆள் அதிகாரபலத்தை விட அவர்கள் பணத்தைத்தான் நம்பினார்கள்.கடந்த 3மாதங்களுக்குமுன்பு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அவர்கள் புழக்கத்தில் விட்ட பணம் ரூ.5,000 கோடி ஆகும்.தேர்தல் பிரச்சாரம் நடந்த போது தலைமை தேர்தல் ஆணையம் மிக கடுமையான நடவடிக்கை எடுத்ததன் காரணமாக திமுகவினரிடமிருந்து ரூ.50 கோடி பணம் கைப்பற்றப்பட்டது,அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மிக நெருக்கமான ஒருவர் நடைப் பயிற்சி சென்று கொண்டிருந்த போது எனக்கு வேண்டிய ஒருவரும் அங்கே இருந்திருக்கிறார். அப்போது தேர்தல் கமிஷன்50 கோடி ரூபாயை கைப் பற்றியிருக்கிறதே என்று அந்த நபரிடம் ஒருவர் கேட்க, அதற்கு கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்கமான அவர் 50 கோடிரூபாய் என்பது ஒரு பானை தண்ணீரை கொண்டு செல்லும் போது சிதறி விழுமே அந்த துளிதான் எங்களுக்கு அது ஒன்றும் பொருட்டு அல்ல.


எங்கள் அண்ணன் (அஞ்சா நெஞ்சனாக இருந்து இன்று காணாமல் போனாரே அந்த அண்ணன்) ரூ. 5000 கோடியை தேர்தலுக்காக அள்ளி இறைத்திருக்கிறார் என்று கூறியுள்ளார். இந்த 5000 கோடி ரூபாயை புழக்கத்தில் விட்டு ஆசைகாட்டியும் மக்கள் மசியவில்லை. அவர்களுடைய பணபலத்திற்கு இடம் கொடுக்காமல் உறுதியாக இருந்து நல்ல முடிவை எடுத்துள்ளனர்.அதனால்தான் மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தரும் ஒரு ஆட்சியாக திட்டங்களைத் தந்திருப்பதாக விளம்பரம் செய்துள்ளோம்.அந்த மாற்றத்தை தந்த மக்களுக்கு அதிமுக சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இங்கே பேசிய சட்டமன்ற உறுப்பினர்களும்,எதிர்க் கட்சித் துணைத் தலைவர்களும் இந்த அரசுக்கு செய்ய வேண்டும் என்கிற மனம் உள்ளது. ஆனால் நிதி பற்றாக்குறைதான் அதற்கு தடையாக உள்ளது என்று கூறினார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.

அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் தாயின் நிலையில் உள்ள என் நிலைமையை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன்.ஒரு தாய்க்கு 10 பிள்ளைகள் உள்ளனர்.அவர்கள் அனைவரும் பசியுடன் இருக்கிறார்கள்.ஆனால் அந்ததாயாரிடம் அந்த வீட்டில் இருப்பது ஒரே தோசைதான். அது ஒரு குழந்தையின் பசியைப் போக்கக் கூட போதாது.அதனால் ஒரு குழந்தைக்கு ஒரு தோசையை கொடுத்து விட்டு ஒன்பது குழந்தைகளையும் பட்டினி போடலாமா என்று கருதிய தாய் அதனை துண்டு துண்டாக்கி 10 குழந்தைகளுக்கும் பகிர்ந்து தருவாள்.அவள்தான் நல்ல தாய்.
இருப்பதை பகிர்ந்து தரவேண்டும் என்கிற தாயின் நிலைமையில் தான் நான் இருக்கிறேன்.தமிழக மக்களுக்கு எவ்வளவோ செய்ய வேண்டும் என்கிற ஆசை எனக்கும், இந்த அரசுக்கும் உள்ளது. பழைய திமுக ஆட்சியினர் மக்களை கடனாளியாக்கி விட்டு சென்றுள்ளனர்.மத்திய அரசு எந்த உதவியும் செய்யாமல் பாரா முகமாக உள்ளது.அத்தனையையும் மீறி நாங்கள் சாதிப்போம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.


இந்த நேரத்தில் தமிழக மக்களை பார்த்து நான் சொல்ல விரும்புவது, “வருந்தாதே,ஏழை மனமே வருந்தாதே வருங்காலம் நல்ல காலம் அந்த நம்பிக்கையுடன்இருங்கள்’.விலையில்லாத அரிசி,ஏழைகளுக்குமிக்சி,கிரைண்டர்,பேன்,ஆடுமாடுகள் வழங்குவதை பாராட்டி இங்கேபேசினார்கள்.இலவசத்துக்காக கையேந்த வேண்டியதில்லை என்னை பொறுத்தவரை எனக்குள்ள ஆசை என்பது எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்,இங்கு இல்லாமை இல்லாத நிலை வரவேண்டும் என்பதுதான்.இனிமேல் தமிழக மக்களுக்கு இலவசம் தரவேண்டிய அவசியமில்லை. இனி எப்போதும் யாரிடமும் கை நீட்டி எதையும் பெறுகின்ற நிலை இருக்கக் கூடாது என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் ஆசை என சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

September 11, 2011

இடுகாட்டில் கொலையான பெண் நிருபர்கள். ஜுனியர் விகடன் கட்டுரை...

நேர்மையான பத்திரிகையாளர்களை அடக்குவதற்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வழி முறையை ஆட்சியாளர்கள் கையில் எடுக்கிறார்கள். இலங்கை,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,ஈராக்,லிபியா,பிரேசில் போன்ற நாடுகளிலும் அடிக்கடி பத்திரிகையாளர்கள் காணாமல் போவதும், கொல்லப்படுவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.இது போன்ற சம்பவங்களுக்குத் தீர்வு காணப்படாத நிலையில் ,அமெரிக்காவின் காலடியில் இருக்கும் மிகப் பெரிய நாடான மெக்ஸிகோவில்,இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருப்பது உலகெங்கும் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



மெக்ஸிகோ நாட்டின் தலை நகரான மெக்ஸிகோ சிட்டி இடுகாட்டுக்குப் பின்புறம் ஒரு பூங்காவில் அனா மர்ஸலா ஏர்ஸ், ரோக்கியோ கன்ஸ்லேஸ் என்ற இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் கழுத்து நெரிக்கப்பட்டு ,இறந்த நிலையில் கண்டு எடுக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் உடலில் துப்பாக்கியால் சுடப்பட்ட அடையாளங்களும் இருக்கின்றன.



இரண்டு பேருக்குமே 48 வயது. போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் ஆட்சியாளர்களை கடுமையான விமர்சனம் செய்யும்,கான்ட்ரலினியா என்ற வார இதழில் நிருபர்களாகப் பணியாற்றியவர்கள்.




கொல்லப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர் எங்கள் பத்திரிகையில் விளம்பர பிரிவில்தால் வேலை செய்தார். அரசை விமர்சனம் செய்யும் பத்திரிகை என்பதால் அரசு விளம்பரங்கள் எங்களுக்குக் கிடைப்பதில்லை. இருந்த போதும் எங்கள் பத்திரிகை தொடர்ந்து வெளி வருகிறது என்றால்...அதற்கு அவரது திறமை மூலம் கிடைக்கும் விளம்பர வருமானம்தான் முக்கிய காரணம். விளம்பர வருமானம் நின்று விட்டால் பத்திரிகையை முடக்கி விடலாம் என்ற எண்ணத்தில் இந்த கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.



அரசாங்கத்தை மட்டுமின்றி,அதிகாரமும் செல்வமும் நிறைந்த ஊழல்வாதிகளைப் பற்றியும் நாங்கள் விமர்சிப்பதால் எங்கள் பத்திரிகை சந்திக்கும் வழக்குகளுக்கு அளவே கிடையாது.அதனால் இந்தக் கொலைக்கு யார் காரணம் என்பதை எங்களால் யூகிக்க முடியவில்லை... என்று அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் வருத்தத்துடன் சொல்கிறார்.



ஊர் எதுவானாலும், நாடு எதுவானாலும் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள்.



நன்றி


ஜூனியர் விகடன்
14.9.2011

September 5, 2011

முதல்வருக்கு தமிழருவி மணியன் அவர்கள் எழுதிய கடிதம்.இரண்டாம் பாதி,

குற்றம் சாட்டப்பட்டவர் மீது அனுதாபத்தையும்,சட்டத்தின் மீது எதிர்ப்பு உணர்வையும் எழச் செய்யும் தண்டனையால் சமுதாயத்திற்கு நன்மையை விட தீமையே வந்து சேரும்.(LAW COMMISSION REPORT-பக்கம் 328 )என்று சட்ட கமிஷன் அறிக்கை சொல்கிறது.

சென்னை உயர்நீதி மன்றத்தில் மூவருக்கும் நியாயம் கிடைக்கும் என்று முழுமையாக நாங்கள் நம்புகிறோம்.மது மேத்தா இந்திய அரசு வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் கருணை மனு எட்டு ஆண்டுகளுக்குப் பின் நிராகரிக்கப்பட்டதன் மூலம் குற்றம் இழைத்ததற்கான மரண தண்டனை பெற்ற கியாஸிராம் என்பவர் மரணத்தின் விழிம்பில் நீண்ட காலம் மன உளைச்சலோடு வாழ்வைக் கழித்திருக்கிறார் என்று சுட்டிக்காட்டி,அவருடைய மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது.(MADU METHA VS UNION OF INDIA) உச்ச நீதி மன்றம் ஒருவருக்கு மரண தண்டனையை உறதி செய்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்பும் தண்டனை நிறைவேற்றப் படாவிடின் அதை ஆயுள் தண்டனையாக மாற்றிய தீர்ப்புகள் பல உண்டு.

நீதி மன்றத்தில் விவாதிக்கப்படும் வழக்கில் நீங்களோ நானோ விமர்சனத்தில் இறங்க முடியாது.என் கடிதத்தின் நோக்கமும் அது வன்று.



பேரறிவாளன்,முருகன்,சாந்தன் மூவரு சிறைக் கம்பிகளிலிருந்து விடுபட நீங்கள் உங்கள் அரசியல் ஆளுமையை உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் பயன்படுத்த வேண்டும்.ராஜீவ் காந்தி படுகொலையில் இந்த மூவரின் பங்களிப்பு ஐயத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை.ஆனாலும் அவர்கள் மூவரும் இருபது ஆண்டுகளுக்கு மேல் சிறைக்குள்ளேயே வாழ்வின் வசந்தமயமான இளமையை முற்றாக இளந்துவிட்டார்கள்.ஆயுள் தண்டனையை விட கூடுதலாக அவர்கள் அனுபவித்து விட்டார்கள்.சட்டத்தின் நோக்கம் குற்றம் செய்தவரை திருத்துவதேயன்றி தீர்த்துக் கட்டுவது அன்று.



முதல்வரே நீங்கள் வைணவ சம்பிரதாயத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்.ஒரு மனிதன் வீதியில் அடிபட்டு விழுந்து கிடந்தால், விழுந்து கிடப்பவன் வேறு யாரும் அல்ல: அது நான் என்று உணர்பவனே வைணவன் என்கிறது இராமநுஜ தரிசனம்.சிலுவையில் அறைந்தவர்களுக்குப் பாவ மன்னிப்பு வேண்டிய பெருங்கருணையாளர் கர்த்தர் இயேசு.தன்னுடைய சிறிய தந்தை ஹம்சாவின் உடலைப் பிளந்து ஈரலைச் சுவைத்த ஹிந்தாவையும், அருமை மகன் ஜைனப்பை ஈட்டியால் குத்திய ஹப்பரையும்,கைபர் விருந்தில் நஞ்சு கலந்த யூத பெண்ணையும் மன்னித்த அருளாளர் நபிகளார்.கோட்சேவையும் மன்னிக்கும் மனம்கொண்ட காந்தியின் பெயரில் கடை விரித்த நம் உள்ளூர் காங்கிரஸ்காரர்களுக்கு மட்டும் மன்னிக்கும் மனோபாவம் வாய்க்கவே இல்லை. சட்டம் கடைமையை செய்யட்டும் என்று சொல்பவர்கள் சட்டம் ஒழுங்காக கடமையைச் செயதிருந்தால் பல சங்கடங்களுக்கு ஆளாகி இருப்பார்கள் என்பதை நான் அறிவேன்.
அவர்களோடு மட்டும் எந்த சூழ்நிலையிலும் கை கோர்த்து விடாதீர்கள்.

தமிழின விரோதிகள் இன்று ஆதரிப்பாரற்று அரசியல் அனாதைகளாகிவிட்டனர்.காங்கிரஸைத் தவிர அனைத்துக் கட்சிகளும் மூவர் விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுப்பதைக் கவனியுங்கள். தூக்குத் தண்டனை இனி யாருக்கும் இருக்கலாகாது என்று முடிவெடுத்து செயற்படுங்கள்.சரித்திரம் என்றும் உங்களுக்கு நீங்காத இடத்தைத் தேடித் தரும்.



வாழ்க்கை புனிதமானது அதைப் பறிப்பது அரக்கத்தனமானது, என்ற கிருஷ்ண ஐயரின் அர்த்தமுள்ள வாசகத்துக்கு உயிர் கொடுங்கள். ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும் என்று எழுத்திலும் பேச்சிலும் கருத்து யுத்தம் நடத்தியவன் நான்.அதற்காக நீங்கள் முதல்வரானதும் போயஸ் தோட்டத்தில் பூங்கொத்துக் கொடுக்க வரிசையில் நான் வந்து நிற்கவில்லை.அது என் சுதர்மத்துக்கும்,சுயமரியாதைக்கும் தகாது.மரண வாசலில் நிற்கும் மூவருக்கும் மறு வாழ்வு கொடுங்கள்.தமிர் கூட்டம் தன் நன்றி செலுத்த உங்கள் வாசல் தேடிப் பூங்கொத்துகளுடன் வந்து நிற்கும். அந்த வரிசையில் நிச்சயம் நானும் நிற்பேன்.
இவ்வாறு அந்த கடிதம் நிறைவடைகிறது.





எது எப்படியோ மூவரின் தூக்கிற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பது ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே நான் கருதுகிறேன்.தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு.




நன்றி...

தமிழருவி மணியன்

மற்றும்


ஜுனியர் விகடன்.

முதல்வருக்கு தமிழருவி மணியன் அவர்கள் எழுதிய கடிதம்...

7.9.2011 தேதியிட்ட ஜுனியர் விகடன் இதழில் திரு.தமிழருவி மணியன் அவர்கள் முதல்வருக்கு எழுதிய கடிதம் ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.அந்தக் கடிதத்தை(கட்டுரை)படித்த போது பல உணர்வுகள் என்னகத்தே தோன்றின.அவ்வளவு உணர்வுப்பூர்வமாக அந்தக் கடிதம் தமிழருவி மணியன் அவர்களால் எழுதப்பட்டிருந்தது.
நீங்களும் படித்துப் பாருங்கள்.கடிதத்தின் தொகுப்பு இதோ.





மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு வணக்கம்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழவும் நீங்கள் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து அரசின்அதிகார மையத்தில் பரிபாலனம் நடத்தவும் வாக்களித்த மக்களின் உணர்வுக்கு மதிப்பு அளித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு தீர்மானங்களைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றியதற்காக முதலில் என் நெஞ்சார்ந்த நன்றி மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்.


ஈழத்தில் நடந்த இனப் படுகொலையில் இந்திய அரசுக்கு மிக பெரிய பங்கு உண்டு என்பது பொய்யின் நிழல் படாத நிஜம்.

மன்மோகன் அரசுக்கு மனம் நோகும் என்று தயங்காமல் சோனியா காங்கிரசுக்கு கோபம் கொப்பளிக்கும் என்று அஞ்சாமல் இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று நீங்கள் ஒரு மனதாக ஓர் அற்புதமான தீர்மானம் நிறைவேற வழி வகுத்ததன் மூலம், உலக தமிழர்களின் நெஞ்சங்களில் உயர்ந்த இடத்தை அடைந்தீர்கள்.


பல்லாண்டுகள் அகதி முகாம்களில் அல்லலுற்றுத் தவிக்கும் ஈழத் தமிழருக்கு ,நலிவுற்ற தாயக தமிழருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தையும் வழங்கி இருண்டு கிடக்கும் அவர்களுடைய இல்லங்களில் ஓரளவு வெளிச்ச விளக்கை ஏற்றிவைத்தீர்கள்.


பேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகிய மூவருடைய கருணை மனு நம் குடியரசுத்தலைவரால் நிராகரிக்கப் பட்டதும்,செப்டம்பர் 9ஆம் நாள் அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தேதி குறிக்கப்பட்டதும் ,அமைதியை நாடும் தமிழினம் மாநிலம் எங்கும் ஆர்ப்பரித்து எழுந்தது.

மத்தியில் ஆழ்வோரின் மரணப் பசிக்கு மூன்று உயிர்களை இரையாக்க நீங்கள் எந்த நிலையிலும் அனுமதிக்கலாகாது என்று ஒட்டு மொத்த தமிழினமும் ஓங்கி குரல் கொடுத்தது.

இளைஞன் முத்துகுமாரைப் போல் செங்கொடி என்ற இளம் சமூகப் போராளிப் பெண்,மூவர் உயிரையும் காக்க தீரத்துடன் தீக்குளித்து நெருப்பில் வெந்து நீறானாள்.அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும்,மனித உரிமை ஆர்வலர்களும் நீங்கள் முன் வந்து மூன்று பேரையும் காக்க வேண்டும் என்று கனிவுடன் கை கூப்பி வேண்டினர்.


பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனு ஜனாதியால் நிராகரிக்கப்பட்ட நிலையில் ,இதனை மாற்றுவதற்கு எந்தவித அதிகாரமும் மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை என்று நீங்கள் சட்டப்பேரவையில் கை விரித்தப்போது,தமிழகம் கலங்கித்தவித்தது.ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்பு மீண்டும் அதே பொருள் தொடர்பான கருணை மனுவை மாநில கவர்னர் பரிசீலிக்க வேண்டும் என்று மாநில அரசு கோர முடியாது என 1991 ல் மத்திய அரசு தெளிவுரை வழங்கியுள்ளது. என்று கூறி நீங்கள் இந்தப் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க முயன்றபோது தமிழரின் நம்பிக்கை தளர்ந்து போனது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையும் ,சட்டமன்றத்தில் நீங்கள் நிறைவேற்றிய இரண்டாவது தீர்மானமும் பாளம் பாளமாய் வெடித்துக்கிடந்த வறண்ட நிலத்தில் வான் மழை வந்து விழுந்தது போன்ற உணர்வை ஊட்டின.


சட்டத்தின் சந்நிதானத்தில் விழி மூடி கிடந்த நீதி தேவதை முற்றாக தூங்கிவிடவில்லை.உங்களுடைய நெஞ்சத்தில் நிழலாடும் நியாய உணர்வும் நிறம் மாறவில்லை மக்களின் விருப்பத்திற்கு நீங்கள் வளைந்து கொடுத்ததில் ஜனநாயகம் நிமிர்ந்துவிட்டது.



அறிவார்ந்த முதல்வரே நீங்கள் சட்டம் படித்து ஒரு சிறந்த வழக்கறிஞராக வர வேண்டும் என பள்ளிப் பருவத்தில் கனவு கண்டதாக ஒரு நேர்காணலில் பதிவு செய்து இருக்கிறீர்கள்.அந்தக் நிறைவேறியிருந்தால்,நிச்சயம் நீங்கள் முதல்வராகியிருக்க முடியாது.முறையாக நீங்கள் சட்டக்கல்லூரியில் சேர்ந்து படிக்காவிடினும் சட்டத்தின் கூறுகளைச் சரியாகப் புரிந்துக்கொள்ளும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.

அரசியலமைப்புச் சட்டம் ,அநியாயமாக மனித உயிர் பறிக்கப்படலாகாது என்ற விழிப்பு உணர்வின் விளைவாக ஏற்படுத்திய பாதுகாப்பு கவசம்தான்,ஜனாதிபதிக்கும் ஆளுநருக்கும் வழங்கி இருக்கும் கருணை காட்டும் உரிமை.

ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப் பட்ட பின்பு அதை மாற்றும் அதிகாரம் எனக்கு இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள் .ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பின்பும் சமூக அநீதிகளுக்கு எதிராக ஓயாமல் போராடிவரும் முதிர்ந்த போராளி வி.ஆர்.கிருஷ்ண ஐயர் உங்களுக்கு வரைந்த கடிதத்தின் வாசகங்களை உங்கள் நினைவில் நிறுத்த வேண்டுகிறேன்.


ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப் பட்ட நிலையில், மாநில ஆளுநர் அதே விவகாரத்தில் கருணை மனுவை அங்கீகரிப்பது முறையன்று.ஆனால் ஜனாதிபதியோ ,ஆளுநரோ ஒருமுறை நிராகரித்த கருணை மனுவின் மீது மீண்டும் மறு பரிசீலனை செய்ய வாய்ப்பு உண்டு. மத்திய அரசின் உள்துறை செயலர் கருணை மனு நிராகரிப்பை மறுபரிசீலனை செம்ய வேண்டி ஜனாதிபதிக்கு விண்ணப்பம் வைத்தால் அதை அவர் ஏற்று தண்டனைக் குறைப்பை வழங்க முடியும்.


ஒரே ஒரு முறைதான் கருணை மனு மீது ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க முடியும் என்று அரசியலமைப்புச் சட்டம் கட்டுப்படுத்தவில்லை என்று கிருஷ்ண ஐயர் உங்களுக்கு தெளிவுபட எழுதியிருக்கிறார். இப்போது மூவரின் மரணக் கயிறுகளை அறுத்து எறியும் கத்தி "நம் தமிழர்" ப.சிதம்பரத்தின் அமைச்சகத்திடம் உள்ளது.

உள்துறை அமைச்சரை நிர்பந்திக்கும் இடத்தில் மன்மோகன் இருக்கிறார்.தமிழகத்தின் கொந்தளிப்பை மிகச் சரியாக உணர்த்திடும் ஆற்றல் உங்களுக்கு இருக்கிறது. அதனால் நல்ல முடிவு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.


பரவலாக மக்களிடையே பெருக்கெடுக்கும் உணர்வுகளுக்கும் ,அபிப்பிராயத்துக்கும் உரிய மதிப்பு அளித்து தண்டனை குறைப்பை தருவதில் தவறு இல்லை.




கடிதம் இத்துடன் நிறைவு பெறவில்லை சிறு தடங்கலால் இத்துடன் இந்த பதிவு முற்றுப்பெறுகிறது.கடிதத்தின் ஏனைய பகுதிகள் அடுத்த இடுகையில் நன்றி.

August 22, 2011

நீதித்துறையின் மரண தண்டனை?

இப்போது பரபரப்பாக அனைவராலும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விசயம் தூக்குதண்டனை பற்றியதுதான்.முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் இருந்த பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகிய மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதுதான் இதற்கு காரணம்.

இது ஏறக்குறைய உறுதிசெய்யப்பட்டது போல்தான்.இறுதி வாய்ப்பான ஜானாதிபதியிடம் கொடுக்கப்படும் கருணைமனு நிராகரிக்கப் பட்டதன் விளைவு இது.


இந்தியாவிலும் இன்னும் சில நாடுகளில் மட்டுமே மரணதண்டனை செயல்முறையில் உள்ளது. 125 நாடுகளுக்கு மேல் மரணதண்டனை சட்டத்தை ஒளித்துவிட்டார்கள்.அது போல இந்தியாவிலும் மரணதண்டனை சட்டத்தை நீக்க வேண்டுமேன பல மனித உரிமை ஆர்வலர்கள் போராடிவருகிறார்கள்.

அவர்களில் முக்கியமானவர் ஆந்திரமாநிலத்தின் வரவர ராவ். அவர் ஜுனியர் விகடனில் தூக்குத்தண்டனைக் குறித்து தனது பார்வைகளை முன் வைத்திருந்தார்.அதில் சில பகுதிகள் இங்கே,,,



ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மூன்று தமிழர்களுக்கு இப்போது அறிவிக்கப்பட்டு இருக்கிற மரணதண்டனை,இன அடிப்படையில் ஆனதென்றால் ,மத்தியில் அஃப்சல் குருவுக்கு வழங்கப்பட்டிருக்கிற மரணதண்டனை மத அடிப்படையிலானது.

இன்றைக்கு இருக்கும் சட்டங்கள் எல்லாம் செல்வந்தர்களுக்கு சாதகமானதாகவே இருக்கின்றன.

பணம் படைத்தவனுக்குத்தான் நீதி.கை ஏந்துபவனோ நிர்க்கதியில்தான்.சமூகத்தின் கீழ்தட்டில் இருப்பவனைக் காக்க வேண்டிம சட்டமே, அவனை அழித்து ஒழிக்கும் முயற்சியில் இறங்குகிறது.

இன்றைக்கு மரணதண்டனைக் கைதிகளைப் பாருங்கள், அவர்கள் நசுக்கப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.மாறாக ஒரு பணக்காரரை உங்களால் சுட்டிக் காட்ட முடியுமா? அல்லது இதுவரை எந்த பணக்காரனாவது தூக்கு மேடையில் ஏறி இருப்பானா?


நமது சட்டங்கள் பொதுவாக பண்ணையார் தத்துவத்தையே நியாயப்படுத்துகின்றன.ஒரு சிவில் வழக்கில் தனிநபர் ஒருவர் மற்றொரு தனிநபருடன் வாதாடலாம். ஆனால் கிரிமினல் வழக்குகளிலோ தனிநபர் ஒருவருக்கு எதிராக,அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடுவார்.அதாவது ஒவ்வொரு குற்ற வழக்கும் காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டு அரசு தனக்கு எதிரானவரை எதிர்க்க வழக்கறிஞர் ஒருவரை நியமிக்கிறது.

வழக்கின் ஒவ்வொரு நகர்வையும் காவல் துறையினர்தான் தீர்மானிக்கிறார்கள். வாக்குமூலங்கள் பெறுவதிலேயே எவ்வளவு வன்முறைகளைப் பிரயோகிக்கிறார்கள் என்பது நாம் அறிந்ததுதானே?


அரிதிலும் அரிதான குற்றங்களில்தான் மரணதண்டனை வழங்கப்படுகிறது என்கிறார்கள். காவல் துறையினரால் என்கவுன்ட்டர் என்ற பெயரில் பலர் சாகடிக்கப்படுகிறார்களே... அதுவும்கூட அரிதிலும் அரிதானதுதானா? ஆக சட்டத்துக்கு புறம்பாக காவல்துறையினர் கொலை செயதால் அது என்கவுன்ட்டர்கள்.அதையே நியாயப்படி செய்ய வேண்டும் என்றால் அதற்குப் பெயர் மரணதண்டனை.இதுதானா உங்கள் நீதி?


பண்டைய கிரேக்க எகிப்திய நாடுகளில் இருந்த அடிமைகள் அந்த நாட்டின் குடிமகன்களாக அங்கீகரிக்கப்படவில்லை. அவர்களின் உரிமையாளர்கள் மட்டுமே குடிமகன்களாக அங்கீகரிக்கப்பட்டார்கள்.உரிமையாளர்களுக்கு மட்டும்தான் சட்டம்,நியாயம்,தீர்ப்பு ,நீதி எல்லாம். அடிமைகளுக்கு எப்போதும் மரணம் ஒன்றுதான்,தண்டனையாகவும்,தீர்ப்பாகவும்,நியாயமாகவும்,நீதியாகவும் அவர்களுக்கு இருந்து வந்திருக்கிறது.


இன்றைக்கு நிராகரிக்கப்பட்டு இருக்கிற கருணை மனுக்களைக் குறித்து நாம் எண்ணிப் பார்க்கையில் ஒரு வகையில் நாம் எல்லோரும் இந்நாட்டின் அடிமைகள்தானோ?

சாமான்யன் செய்த குற்றத்துக்கு மரணதண்டனை வழங்குவதன் மூலம் சட்டம் இன்னொரு குற்றம் செய்வது , எப்போதும் சமமாகாது, நீதியும் ஆகாது!" என்று வேதனையோடும் கோபத்தோடும் வெடித்தார் வரவர ராவ்.

அரசாங்கம் கொலை செய்யக்கூடாதென்று சொல்கிறது. எப்படி தெரியுமா? கொலை செய்வதன் மூலமாக, என்று தன் ஏழை படும்பாடு நாவலில் எழுதியிருக்கிறார் விக்டர் ஹியூகோ.



இப்படி பல சமூக ஆர்வலர்கள் மரணதண்டனையை எதிர்த்துக் குரல் கொடுத்தாலும் அரசாங்கம் இன்னு இடித்தப்புளி மாதிரி இருப்பது ஏனோ?...









நன்றி,
ஜுனியர்விகடன்
24.8.2011

August 15, 2011

அரசியல்அரசியல்

2 ஜி விவகாரத்திற்காக ஒரு

கூட்டத்தொடர் முழுவதும்

பாராளுமன்றத்தை முடக்கினார்கள்.146 கோடி ரூபாய் மக்கள் பணம் வீணானது.

அது பற்றி யாருக்கும் கவலையில்லை.



இப்போது காமன்வெல்த் விளையாட்டுப் பிரச்சினை .

மத்திய கணக்கு தணிக்கைக் குழு [சி.ஏ.ஜி] டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீதும் குற்றம் சாட்டியுள்ளது. அவர் ராஜினாமா பண்ணியே ஆக வேண்டும் என்கிறார்கள்.

இல்லையேல் பாராளுமன்றத்தை முடக்க எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

மீண்டும் மக்கள் பணம் ஒரு நாளைக்கு எட்டுக் கோடி ரூபாய் வீணாகப் போகிறது.


பாராளுமன்றம் என்பது மக்கள் மேடை நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்காக எதிர் கட்சிகள் குரல் எழுப்ப பாராளுமன்றம்தான் உரிய இடம்.

மக்கள் பிரச்சினையை பேசித் தீர்க்க வேண்டிய இடத்தில்,

பேசவேண்டியவர்கள் பேசாமல் எழுந்து

போய்விட்டால் யாருக்கு நஷ்டம்?

மக்களுக்குதானே.

அதோடு மக்களின்
அடிப்படை உரிமைகள் பறிபோகின்றன.மக்களுக்குச் சேர வேண்டிய நலத் திட்டங்கள் பல உரிய நேரத்திரல் அமல்படுத்தப்படாமல் போகும் அவல நிலை.


தீராத மக்கள் பிரச்சனைக்காக ஒரு வாரம் பாராளுமன்றத்தை நீட்டியுங்கள் என்று ஒரு எ.பி.யாவது இதுவரை வாதாடியிருப்பாரா? மக்கள் பிரச்சனைக்காக பாராளுமன்றத்தை முடக்குவது ஜனநாயகமாகாது.அது ஒரு கேலிக்கூத்து.


பிரதமர் அலுவலகம் மீதும் சி.ஏ.ஜி. அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அப்படியானால் பிரதமர் பதவி விலகும் வரை பாராளுமன்றத்தை முடக்கப் போகிறார்களா? பாராளுமன்ற முடக்கம் ஆழும்கட்சிக்கும் நல்லதல்ல எதிர்கட்சிக்கும் நல்தல்ல.மக்கள் பிரச்சினையைப் பேச எத்தனையோ வழிகள் இருக்க, பாராளுமன்ற முடக்கத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவது வெட்கக்கேடு.




நன்றி.

குமுதம் வார இதழ்.

17.8.2011

August 8, 2011

மம்முட்டி

மம்முட்டி என்கிற ரசனைக் கலைஞனின் வாழ்வியல் அனுபவங்களின் தொகுப்பே இந்தப் புத்தகம். மம்முட்டி என்கிற பெயர் பிடிக்காமல் எகிப்து நடிகர் ஓமர் ஷெரீஃபின் பெயரை வைத்துக்கொண்டு அலைந்தது .வக்கீலாக வாழ்ந்தது,முதல் தர நடிகர் ஆனது வரை வாழ்வில் சந்தித்த மனிதம், அன்பு, நேசம்,நட்பு,பாடம் என எல்லாவற்றையும் பாசிட்டிவ் கோணத்தில் பகிர்ந்து கொண்டு இருக்கிறார் மம்முட்டி.விவாகரத்து வழக்கில் அன்பான கணவருக்கு எதிராகச் சாட்சி சொல்ல முடியாமல் மயங்கி விழுந்த மனைவி,மம்முட்டியால் காப்பாற்ற முடியாமல் போன முதல் ரசிகன் என அவரது வாழ்கைச் சம்பவங்கள், அது கற்றுக் கொடுத்தப் பாடம் ஆகியவற்றைக் குட்டிக் கதைபோல சுவாரஸ்யமாக சொல்லிச் செல்கிறார். {மூன்றாம் பிறே வாழ்வனுபவங்கள்}{ஆசிரியர்.மம்முட்டி}{தமிழில்..கே.வி.ஷைலஜா}{வெளியீடு..வம்சி புக்ஸ்,19.டி.எம்.சாரோன்,திருவண்ணாமலை}{பக்கங்கள்..128}{விலை..ரூபாய்.180} நன்றி.ஆனந்தவிகடன்.3.8.11

July 29, 2011

குமுதம் தலையங்கம்

தனக்கென்று சொந்தமாக சிறு துண்டு நிலமாவது வேண்டும் என்று கனவு காணாதவர்கள் யார் இருக்கிறார்கள்? நிலம் என்னும் நல்லாள் என்கிற பைந்தமிழ் வரிகள் சொல்கிறபடி நிலம் என்பது வெறும் மண் மட்டுமல்ல. அதில் எத்தனையோ மனிதர்களின் நம்பிக்கைகள் ஈரத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கின்றன.அப்படிப்பட்ட நிலத்தையும் வீட்டையும் அதிகார பலத்துடன் பயமுறுத்தி பெரும் கும்பல் அராஜகமாகப் பறித்திருப்பதுப் பற்றி என்ன சொல்ல? தமிழகத்தில் ஆட்சி மாறியதும் வந்த புகார்களைப் பரிசீலித்து நில ஆக்கிரமிப்புத் தடுப்புக்காக சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு சில வாரங்களிலேயே இரண்டாயிரத்து நானூறுக்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்திருப்பது மலைக்க வைக்கிறது. நிலத்தைப் பறிகொடுத்தவர்களில் பெரும்பாலானோர்கள் முதியவர்கள், கூடவே பெண்களும்,விதவைகளும் அதிகமாக ஏமாற்றப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்ற விசயங்கள் பீதியை ஏற்படுத்துகின்றன. முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் என்கிறப் பாரபட்சமற்றுப் புகார்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. இதில் சிலர் மிரட்டப்பட்டு புகார்களைத் திரும்பப் பெறும் நிலை உருவாகிவிட்டால் ஆயிரக்கணக்கானோரின் நம்பிக்கை பலனில்லாமல் போய்விடும். கட்சி பேதமற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அப்பாவியான பலரிடமிருந்து முறைகேடாகப் பறிக்கப்பட்ட நிலங்களையும் சொத்துக்களையும் திரும்ப அவர்களுக்குக் கிடைக்க வழி செய்ய வேண்டும். அதற்கான நம்பிக்கையை முதலில் உருவாக்க வேண்டும். எந்த ஆட்சியாக இருந்தாலும் இம்மாதிரியான சமூக விரோதமாகச் செயல்படும் கும்பல்கள் முளைத்துக் கொண்டுதான் இருக்கும். ஆனால் அந்தக் களைகள் வளர இந்த ஆடசி உரம் அளித்துவிடக் கூடாது என்பதுதான் தமிழகத்தில் இருக்கும் சராசரி தமிழனின் கவலை. நன்றி குமுதம் வார இதள்.

July 28, 2011

கூடங்குளம் அணுமின் நிலையம் ஓர் தகவல்

கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் பற்றிய அடிப்படைத் தகவல்களைக்கூட அணுசக்தித் துறையோ,மத்திய அரசோ தராமல் இருந்த நிலையில் திட்டம் சம்பந்தமான பத்திரிகைச் செய்திகள், ஆய்வுக்கட்டுரைகள், போராட்டக் கட்டுரைகள் போன்றவற்றைத் தொகுத்து ஒரு புத்தகம் 2004-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.தகவல்கள் தரமறுத்த அதிகார வர்கத்துக்கு தக்க பதிலாக அமைந்தது இந்தக் கையேடு.கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தைப்பற்றிய ஒரு பொது விவாதத்தை துவக்குவதும்,அணு சக்தித் துறை எனும் 'புனிதப்பசுவின்' போலி வேடங்களைத் தோலுரித்துக் காட்டுவதும்,அணு சக்திக்கு எதிரான போராளிகளுக்கு பயன்படும் தகவல்களைத் திரட்டி வழங்குவதுமே இப் புத்தகத்தின் நோக்கங்கள்.382 பக்கங்கள் கொண்ட இந்த ஆவணத்திரட்டு....திரைப்படங்களும்,நாவல்களும்,நாடகங்களும்,கவிதைகளும் சாதிக்க முனைவதை ஆவணங்கள் வழியாக அடைய முயற்சிக்கிறது. நன்றி., ஜுனியர் விகடன் மற்றும் கட்டுரை ஆசிரியர்.. 29.6.11

November 29, 2010

அன்பு

அன்பைப் பற்றி சொல்வதென்றால் அன்பில்லையேல் இவ்வுலகம் இல்லை அப்படியென்று சொல்ல மாட்டேன்.காரணம் பெரும்பாலும் அன்பு என்பது பணத்தைப் போலவே பரிமாறப்படுகிறது. அதாவது பரிமாற்றங்கள் நடைபெறுகின்றது.இவ்வளவு கொடுத்தால் இவ்வளவு கிடைக்கும் என்ற விகிதக்கணக்கு பார்க்கப்படுகிறது.இது மனிதனின் இயல்பு யாராவது யார்மீதாவது அ ன்பு செலுத்தினால் அவர்களும் நம்மீது அன்பு செலுத்த வேண்டும் என்று நினைப்பது இயல்பு அப்படி நினைக்காமல் இருந்தால் ஆச்சரியம்தான் ஏனென்றால் மனிதன் அன்பு செலுத்துவதைவிட அன்பு செலுத்தப்படுவதைதான் அதிகம் விரும்புகிறான்.இப்படி அன்பு என்பது வியாபாரம் ஆகிவிட்டது.இந்த உண்மையை அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.நீங்கள் இதை ஏற்றுக்கொள்ளாவிடினும் எனக்கு சம்மதமே ஏனென்றால் நான் உங்களை அன்பு செய்கிறேன்.தவறகள் தவிற்கப்பட வேண்டியதல்ல திருத்தப்பட வேண்டியவை.இதை நான் சொல்லவில்லை ஏதோ ஒரு வெளிநாட்டு அறிஞர் சொன்தாக கேள்வி.
நன்றி
வணக்கம்