July 22, 2012

மீனாட்சி அம்மன் கோயில் ஓர் அனுபவம்.

தமிழ் நாட்டில் எவ்வளவோ சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன,அவைகளில் நான் பார்த்து ரசித்தது ஒன்றோ இரண்டோதான்.அந்த வகையில் சமீபத்தில் பார்த்து வியந்த இடம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.அதை கோயில் என்பதைவிட கலைகளின் மறு வடிவம் என்றே கூறலாம்.அவ்வளவும் கலை நயமும்,வேலைப்பாடும்,நவீனமும் கலந்த ஓர் அம்சம்.கோயிலைப் பற்றி விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை.




கோயிலுக்கு உள்ளே நுளையும் முன்பே வானுயர்ந்த கோபுரங்களையும் அதன் வேலைப்பாடுகளையும் பார்த்து வாய் பிளந்து விட்டேன்.பிளந்த வாயுடனே நுளைவாயிலினில் நுளைந்தேன்.அங்கு கோயிலுக்கு வருபவர்களை சோதனையிட காவல் அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர்.இரண்டு பாதைகளில் சோதனை நடந்து கொண்டிருந்தது.வலப்புற பாதையில் இரண்டு மூன்று ஆட்கள் வரிசையில் நின்று கொண்டிருந்ததால் இடது பக்கமாக போவோம் என்று போனேன்.முன்னால் சிறு பகுதி துணியால் மறைக்கப்பட்டிருந்தது.அது என்னவென்று யோசிப்பதற்குள் வலது புறமிருந்து ஓர் அதட்டல் கேட்டது...யோவ் எங்கேயா போற இங்க வாய்யா என்று, நான் அதிர்ச்சியில் திரும்பினால் காவலதிகாரி என்னையே முறைத்துக் கொண்டிருந்தார்.அப்போதுதான் எனக்கு புரிந்தது நான் போன பாதை பெண்களக்கானது என்று.கொஞ்சம் விட்டிருந்தால் அந்த துணி மறைப்பினுள் நுளைந்திருப்பேன்.நல்ல வேளை காவலதிகாரி குரல் கொடுத்ததால் அடிவாங்காமல் தப்பினேன்.செய்த தவறுக்காக காவல் அதிகாரியிடம் சாரி என்றேன்,என்ன சாரி பூரின்னுகிட்டு என்று நக்கலாக கேட்டுகொண்டே விட்டுவிட்டார்.

அப்படியே அசடு வளிந்தபடியே கோயிலுனுள் நுளைந்தேன்.பழைய அதிர்ச்சி நீங்கி புத்துணர்ச்சி வந்தது.அத்தனையும் மனிதனின் கைவிரல் செய்தது.பெரிய கற்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள்,பெரிய பாளங்களாக அறுக்கப்பட்ட கற்களினால் மேற்கூரைகள்,ஒரே கல்லாலான துண்கள் என அனைத்துமே பிரம்மாண்டம்.இந்த கோயில் சுமார் 3600 ஆண்டுகளுக்கு முன்னர் குலசேகர பாண்டியனால் துவங்கப்பட்டு கி.பி 1700களில் மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னர்களால் கட்டிமுடிக்கப்பட்டதாக அங்கிருந்த குறிப்புப்பலகை கூறியது.(விக்கிப்பீடியாவிலும் இதே தகவல்தான்)
எனக்கு கேள்வியாக இருந்தது ஆயிரங்கால் மண்டபத்தை பற்றிதான்.எதற்காக இதைக் கட்டினார்கள் என்று புரியவில்லை. ஏனென்றால் மண்டபம் முழுவதுமே தூண்களால் நிரம்பியிருக்கின்றன,அப்படி இது எதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கும்?ஒரு வேளை பொது மக்களுக்கு சாப்பாடு போடுவதற்காக இருக்கும் என நினைத்துக் கொண்டேன்.தூண்களின் இடையில் வரிசையாக அமர்ந்து சாப்பிடலாம் அதற்கான இடைவெளிமட்டுமே இருக்கிறது.அதுபோக அங்குள்ள சிற்பங்கள்,தூண்கள்,மற்றும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பழையகாலத்து சிலைகள் என அனைத்துமே பரவசமேற்படுத்தக் கூடியவை.


ஆசைதீர ஓடி ஓடி கோயிலை சுற்றிப்பார்த்தேன்.எல்லாமுமே நன்றாக இருக்க கோயிலுனுள் சில முரண்பாடுகள்.

பொதுமக்கள் வழிபடுவதற்காக மன்னர்கள் கட்டிவைத்த கோயிலை இப்போது சந்தையாக்கியிருக்கிறார்கள்.குறைந்தது நூறு கடைகளாவது கோயிலின் உட்புறம் காணலாம்.அடுத்தது வெளிநாட்டினர் சாமியை சந்நிதானம் சென்று தரிசனம் செய்ய அனுமதியில்லை.ஆனால் 200 ரூபாய் கட்டினால் வெளிநாடோ உள்நாடோ எவன் வேண்டுமென்றாலும் உள்ளே போகலாம்.என்னே ஒரு கலாச்சாரம்.அடுத்து போட்டோ, வீடியோ எதுவும் எடுக்கக்கூடாது.கண்டிப்பா எடுக்கணும்னா வீடியோக்கு 250 ரூபாய் போட்டோவுக்கு ஐம்பது ரூபாய் அது கோனிக்காவுல எடுத்தாலும் சரி மொபைல்ல எடுத்தாலும் சரி அது உங்கபாடு.இப்படி வருமானத்தை பெருக்கிக் கொள்ளும் கோயில் நிர்வாகம் அந்த பணத்தை வைத்து பொதுவான நலத்திட்டங்கள் ஏதேனும் செய்தனரா என்றால் இல்லை என்றே பதில் இருக்கும்.
இப்படி எதற்காக பொதுமக்களிடமிருந்து பணத்தை பறித்துக் கொள்ள வேண்டும்?(ஒரு வேளை பஞ்சத்துல இருப்பாங்களோ...)இப்படி வசூலிப்பதற்கு ஒரு தடை உத்தரவு கொண்டு வரமாட்டார்களா?
இது மாதிரி ஒரு சில வழிப்பறிகளை தவிர்த்து விட்ட கோயிலை பார்த்தால்,ரசித்தால் மனதிற்குள் பட்டாம்பூச்சி பறக்கும்.எனக்கு மனதுக்குள் பறந்தது.


சின்ன சந்தேகம்....
மீனாட்சி அம்மன் கோயிலில் இந்த பாதாள அறை,ரகசிய அறை எதுவும் இல்லையா?ஏன்னா நம்ம திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில்ல உள்ள சில பல அறைகளில் பத்து,இருபது லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் இருப்பதாக சொல்கிறார்கள்.இங்கும் எதேனும் அறைகள் இருந்தால் அதில் நூறோ ,இருநூறோ கோடி இருந்தால் பண தட்டுப்பாடில் இருக்கும் மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தினருக்கு உதவியாய் இருக்குமே.....






மேலும் மீனாட்சி அம்மன் கோயிலைப் பற்றி அறிந்து கொள்ள விக்கிப்பீடியாவின் இந்தச் சுட்டி சொடுக்கவும்.


மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.

July 17, 2012

ஜனாதிபதி மாளிகை ஒரு பார்வை.

நாட்டின் முதல் குடிமகனை தேர்தெடுக்கும் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது.இதில் ஆழுங்கட்சி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி வெற்றி பெறுவாரா இல்லை இதர போட்டியாளரான சங்மா வெற்றி பெறுவாரா என்பது தேர்தல் முடிந்த பிறகு தெரிந்துவிடும்.நாட்டின் ஜனாதிபதி என்பவர் இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு தலையாட்டி பொம்மைதான். இருந்தாலும் அவர்களுக்கான ராஜபோக வாழ்கைக்கு எந்தவித குறைவும் இருக்காது.மாத சம்பளமாக சுமார் 1,50,000 ரூபாய்களும் மற்றும் வெளிநாட்டு சுற்றுபயணங்கள்,சகல வசதிகளுடன் வீடு(ராஷ்டிரபவன்).போன்ற ஆடம்பர வாழ்கையை அனுபவிப்பார்கள்.பெயருக்காக அந்த பதவி அலங்கரிக்கப்பட்டாலும் நாட்டின் முதல் குடிமகன் என்ற பெருமை ஜனாதிபதிக்கு உண்டு.இப்படி சகல சம்பிரதாயங்களோடு வலம் வரும் ஜனாதிபதி அவர்கள் பதவியில் அமர்ந்தது முதல் அடுத்த ஐந்தாண்டுகள் வரை வசிப்பதற்காக கொடுக்கப்படும் மாளிகைதான் ராஷ்டிரபவன்.அமெரிக்காவின் வெள்ளை மாளிகை போல்.

அப்படிப்பட்ட மேன்மையான ராஷ்டிரபவனை பற்றி தினமலரில் வெளியான கட்டுரை இதோ.



இந்திய ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லம்,"ராஷ்டிரபதி பவன்' (ஜனாதிபதி மாளிகை). இது சிறந்த கட்டடக்கலை சிறப்பம்சத்தை கொண்டது. உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரின் இல்லம் இதுதான்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது, நாட்டின் தலைநகராக கோல்கட்டா இருந்தது. 1911ம் ஆண்டு டில்லிக்கு ஆங்கிலேயர் தலைநகரை மாற்றினர். அதே நேரத்தில் அதற்கான தலைமைச் செயலகம், அரசு அலுவலங்கள் அமைப்பது குறித்த ஆராய, ஆங்கிலேய அரசு, கட்டட பொறியாளர்கள் எட்வின் லேண்ட்சீர் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பாகர் ஆகியோர் தலைமையிலான குழுவை அமைத்தது.
இக்குழு தற்போதைய டில்லிக்கு அருகே 5 கி.மீ., தொலைவில் உள்ள "ரெய்சினா ஹில்ஸ்' என்ற உயரமான இடத்தை தேர்வு செய்தது. இப்பகுதியில் தான் தற்போதைய ஜனாதிபதி மாளிகை,பார்லிமென்ட், பிரதமர் அலுவலகம், மத்திய அரசு அலுவலகங்கள் ஆகிய கட்டடங்கள் உள்ளன. இது டில்லியின் மற்ற பகுதிகளை விட 741 அடி உயரமானது.
இதற்காக 1911 முதல் 1916 வரை, "1894 நிலம் கையகப்படுத்தும் சட்டம்' அடிப்படையில் 300 குடும்பங்கள் காலி செய்யப்பட்டன. 4000 ஏக்கர்நிலம் கையகப்படுத்தப்பட்டது."ஹில்ஸ்' ன் உயரமான இடத்தில் விக்டோரியா அரண்மனையும் (தலைமை செயலகம்), அதற்கு அருகே அரசு அலுவலங்களும் கட்ட திட்டமிடப்பட்டு, 1912ல் பணி தொடங்கப்பட்டது. விக்டோரியா அரண்மனை உயரமாக இருக்க வேண்டும் எனலுட்யென்ஸ் விரும்பினார். 1916ல் ஆங்கிலேய அரசு, அதிகமான நிதி செலவு செய்ய முடியாது என தெரிவித்து இவரது கோரிக்கையை நிராகரித்தது. இதையடுத்து"விக்டோரியா அரண்மனையின்' அளவை குறைத்தார். இந்திய கலாசாரமும், இக்கட்டடத்தில் இடம் பெற்றது.
கட்டத்திற்கான திட்ட மதிப்பீடு, துவக்கத்தில் 4லட்சம் பவுண்ட் என முடிவு செய்யப்பட்டு. இறுதியில் 9லட்சம் பவுண்டாக அதிகரித்தது. நான்கு ஆண்டுகளில் முடிய வேண்டிய பணி 17 ஆண்டுகள் இழுத்தது.
சிறப்பம்சம்: நான்கு மாடிகள், 340 அறைகள் இதில் உள்ளன. மொத்தம் 2 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. 70 கோடிசெங்கல், 30 கோடி கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ராஷ்டிரபதி பவன் கட்டடத்தில் இடம்பெற்றுள்ள "டூம்' வெகு தூரத்தில் இருந்த பார்ப்போரை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டது. கட்டடத்தில் உள்ள தூண்களில் "மணி' இடம் பெற்றுள்ளது. இது இந்து, புத்த, ஜெயின் சமூக மரபை பிரலிபதிப்பதாக அமைந்துள்ளது. ஆனால் இந்த"மணிகள்' கட்டடத்தின் வடக்கு பிளாக், சவுத் பிளாக் மற்றும் பார்லிமென்ட் வளாகம் ஆகியவற்றில் இடம் பெறவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்று ராஜாஜி இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக பதவியில் இருந்த போது, அவர் பயன்படுத்திய அறைகள், தற்போது வெளிநாட்டு தலைவர்கள் சந்திக்கும் இடமாக விளங்குகிறது.
இரண்டு இடங்கள்: முகுல் கார்டன், ஹெர்பல் கார்டன் ஆகிய தோட்டங்கள் ராஷ்டிரபதி வளாகத்தில் அமைந்துள்ளன. டில்லியைத் தவிர, சிம்லா (வடக்கு) மற்றும் ஐதராபாத் (தெற்கு) ஆகிய இடங்களில் ஜனாதிபதிக்கான"ராஷ்டிரபதி நிலையம்' அமைந்துள்ளது.







மேலும் ஒரு தகவல்.



ஜனாதிபதி தேர்தல் என்பது மறைமுக வாக்கெடுப்பு மூலம் நடைபெறுகிறது.இதிலும் பல புரியாத புதிர்கள் இருக்கின்றன அவற்றைப் பற்றி தெரிந்த கொள்ள கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்.

நாட்டின் முதல் குடிமகனை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறார்கள் ஒரு பார்வை.

July 7, 2012

தமிழ்நாட்டின் சில பிரச்சனைகள் சில கேள்விகள்.

தமிழ்நாட்டில் தற்போது டாப் டென் பிரச்சனைகளாக மக்கள் மத்தியில் உலா வரும் சில.




1.மின்வெட்டு
இது சில பல ஆண்டுகளாக இருந்து வந்தாலும் அதிமுக ஆட்சியில் இன்னும் அதிகமாகியதோ என்று தோன்றுகிறது,தமிழ் நாட்டைப் பொறுத்தவரை மின்சாரம் என்பது வரும் ஆனா வராது.

2.பேருந்துக் கட்டணம்.
பேருந்து கட்டணங்களை உயர்த்தி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியிருந்தாலும் ஒவ்வொரு முறை பேருந்தில் பயணிக்கும் போதும் அம்மையாரின் பெருமையைப் பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை.

3.இடைத்தேர்தல்.
சம்மந்தப் பட்ட தொகுதி மக்களுக்கு இனிப்பான செய்தி.எதிர் கட்சியினருக்கு தோற்று விடுவோம் என்று தெரிந்தே களம் காண வேண்டிய துர்பாக்கியநிலை.பிற தொகுதி மக்களுக்கு நம் தொகுதியில் எப்போது இடைத்தேர்தல் வரும் என மாண்புமிகு எம்.எல்.ஏ வை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதே ஒரு பிரச்சனை.



4.தண்ணீர், தண்ணீர்.

கி.மு விலேயே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் பிரச்சனை இருந்து வந்தாலும் அதன் வீரியம் இன்றும் குறையாமல் பாதுகாக்கப்படுகிறது.அண்டை மாநில ஆறுகளிலிருந்து தண்ணீர் தர மறுப்பதால்,இந்த யமுனா,கங்கை பாயும் வடமாநிலங்களிடம் கொஞ்சம் தண்ணீர் கேட்டுபார்க்கலாமோ?

5.இலவசங்கள்.
ஆடு,மாடு,வீடு,அம்மி,பணம்,டிவி,நிலம் இன்னும் எவ்வளவோ பொருட்கள் அம்மா ஆட்சியிலும் ஐயா ஆட்சிலும் கொடுத்தார்கள்.இன்னும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் பொது மக்களின் தற்போதைய கேள்வி அடுத்த தேர்தலில் கார் கொடுப்பார்களா?பைக் கொடுப்பார்களா?




6.ஐயாவா?அம்மாவா?
இது ரொம்ப ரொம்ப கஷ்டமான குளப்பமான கேள்வி,கூடவே பிரச்சனையும்.ஐயா நல்லவரா? அம்மா நல்லவரா?கிட்டத்தட்ட 25 வருட கேள்வி இது.

7.கூடங்குளம் அணு உலை.

பூதாகரமாக உருவாகி அதன் சுவடே தெரியாமல் அளிந்த பிரச்சனை.ஆனா மின்சாரம்
கேரளா,கர்நாடகம்,ஆந்திரா போயிட்டு மீதியிருந்தா நமக்கு தருவாங்க,ஏன்னா
நமக்கு பரந்த மனசாச்சே!!?

8.ஸ்பெக்ட்ரம்.
உண்மையிலேயே 175000 கோடி சுருட்டியிருக்க முடியாது,ஆனா அதுல பாதி
திருடியிருக்கலாம்.அது சரி அவ்வளவு பணத்தை எங்கு
மறைப்பார்கள்,மறைத்தார்கள்.



9.நித்தியமும் ஆனந்தம்.
நித்தியானந்தா மேல் பலருக்கு கோபம் இருந்தாலும் எனக்கு கொஞ்சம்
பொறாமையாதான் இருக்கு.என்னா வாழ்க்க வாழ்ரார் சார் அவரு வயிறு
எரியுது.இப்போதெல்லாம் நித்தியானந்தா என்றால் கிளுகிளுப்பும்
பிரச்சனையும்தான்.


10.சின்னதிரை.
ரியாலிட்டி ஷோ நடத்துறேன்கிற பேர்ல இவங்க பண்ற அலம்புக்கு ஒரு அளவே
இல்லாம போயிடிச்சி.அமெரிக்காகாரன் பண்றத இந்தியாகாரன் சுடுறான் அவனப்
பாத்து தமிழ்நாட்டுக்காரன் சுட்டு ஏறத்தாள ஆறேளு கோடி பேருக்கு அறிவை
வளர்த்துக் கொண்டிருக்கிறான்.பணத்திற்காக எதையும் செய்யும் உலகமப்பா
இது.

March 21, 2012

ஊடகத்தில் என்றும் நிலைத்திருக்கப் போகும் ‘டிஜிட்டல் ரஜினி’ – த சன்டே இந்தியன் சிறப்புக் கட்டுரை!

உடல்நலக்குறைவில் இருந்து மீண்டு வந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தொழில்நுட்ப உதவியுடன் புதிய படமான கோச்சடையானில் தோன்றுகிறார். ரத்தமும் சதையுமான ரஜினியைப் பார்த்து ரசித்த தமிழ் ரசிகர்கள், அவரது டிஜிட்டல் பிம்பத்தை ஏற்றுக்கொள்வார்களா?




சுல்தான் தி வாரியர், ராணா, கோச்சடையான் என்று ரஜினிகாந்த்தின் சமீபத்திய படம் பற்றிய மீடியா செய்திகளும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. கடைசியில் கோச்சடையான் வேலைகள் தொடங்கியுள்ளன. ஆனால் ராணா என்கிற தலைப்பின் வசீகரத்தில் மயங்கிய அவர், அதே பெயரில் ஒரு கதையில் நடிக்கும் ஆசையில் இருக்கிறார். இயக்குநர் கே.வி. ஆனந்திடம் அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது கடைசித் தகவல்.
ஆனால் எந்திரனுக்குப் பின்னால் இனியும் ரஜினி ரத்தமும் சதையுமாக நடிக்க இருக்கும் படமாக வேறெந்த படமும் இருக்குமா? எந்திரன்தான் ஒரு சினிமா முழுக்க தானே நேரில் வந்து ரஜினி நடித்த கடைசிப் படமாக இருக்கலாம். அவரது திரைவாழ்வில் மிக உச்சகட்டப் படமாக அதிக பொருட்செலவில், அதிக விளம்பரத் துடன் வெளியாகி கோடிகளைக் குவித்த படம் அது. இனி அப்படி யெல்லாம் வந்து அவர் கஷ்டப்பட்டு நடிப்பதற்கு அவசியம் இல்லை என்பதைக் காட்டுவதே கோச்சடையான்.
எந்திரனுக்குப் பின்னால் ரஜினிகாந்த் நடிக்கப்போவதாக அறிவிக்கப்பட்ட ராணா படபூஜை ஏவிஎம் ஸ்டுடியோவில் பழைய பிள்ளையார் கோயிலில் நடந்தது. அப்போது ஒரே ஒரு ஷாட் மட்டுமே எடுக்கப்பட்டது. அன்று மாலையே அவருக்கு உடல்நலம் மோசமாகி இசபெல்லா மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். பிறகு ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று, உயர்தர சிகிச்சைக்காக மே 27 ஆம் தேதியன்று சிங்கப்பூர் சென்றார்.
அமிதாப்பச்சன் பரிந்துரையின்பேரில் அங்கு சென்றவர் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு உடல்நலம் தேறி ஜூலை 13 ஆம் தேதியன்று சென்னைக்கு வந்தார். மீண்டும் அதே சுறுசுறுப்புடன் ரஜினி உலவ ஆரம்பித்தார். இதெல்லாம் பழைய கதை. இதற்கு அடுத்ததாக ரஜினி என்ன செய்யப்போகிறார்? படங்களில் நடிக்க அவரது உடல்நிலை ஒத்துழைக்குமா என்று பலராலும் ஊகங்கள், கற்பனைகள் எழுப்பப் பட்டன.





கோச்சடையான் படத்தின் கதையைப் போலவே, ரஜினிகாந்த உடல்நலம் பற்றியும் பல கற்பனைக் கதைகள் வெளிவந்துகொண்டிருந்தன. அவர் மெதுவாகப் பேசுகிறார்; முன்பைப்போல அவரால் வேகமாக நடக்கமுடியவில்லை என்று சொல்லப்பட்டது. அதெல்லாம் பொய்யானவை என்பதை அவரே விழாக்களில் கலந்துகொண்டு பொய்யாக்கினார்.

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு நடந்த பாராட்டுவிழாவில் கலந்துகொண்டு எப்போதும்போல கலகலப்பாகப் பேசினார். அவரது பேச்சிலும் நடையிலும் எந்த சுணக்கத்தையும் பார்க்க முடியவில்லை. அதேபோல சமீபத்தில் ‘போர்பிரேம்ஸ்’ கல்யாணத்தின் மகன் திருமண விழாவில் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் உட்கார்ந்து வாழ்த்திச் சென்றிருக்கிறார். திருமதி. லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில் அவரது பெயரில் இயக்குநர் பாலசந்தருக்கு விருது வழங்கப்பட்டது. அங்கு இருபது நிமிடங்களுக்கு மேல் பேசிய ரஜினி, “என்னை திரையுலகில் அறிமுகப் படுத்திய குருநாதர் பாலசந்தர். அவருக்கு என் பெயரில் விருது வழங்குவது சரியல்ல. அடுத்த ஆண்டு முதல் அவருடைய பெயரில் மற்றவர் களுக்கு வழங்குங்கள்” என்று குறிப் பிட்டுள்ளார்.
எல்லா கற்பனைகளுக்கும் பதில் சொல்வதுபோல கோச்சடையான் என்ற புதிய படத்தில் ரஜினி நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டு பிரத்யேகப் புகைப்படங்களும் வெளியாயின. ஒரு மன்னனின் கெட்டப்புடன் வில்லுடன் ரஜினி நிற்பதுபோலவும் ஒற்றைக் காலில் கம்பீரமாக தவ நிலையில் இருப்பதுபோலவுமான காட்சிகள் வெளியிடப்பட்டன. இது அவதார் படத்தைப் போல 3 டி அனிமேஷன் தொழில்நுட்பத்தை முழுவதும் பயன்படுத்தி வெளிவரும் என்பது பட வட்டாரம் சொல்லும் தகவல். கோச்சடையான் என்ற பெயருக்குப் பின்னணியில் பல கதைகள் சொல்லப்படுகின்றன. நீண்ட சடைமுடியைக் கொண்ட சிவபெருமான் என்றும் பாண்டி நாட்டில் கோச்சடை பகுதியை ஆட்சிபுரிந்த குறுநிலமன்னன் ரணதீரன் என்றும் செய்திகள் உலவுகின்றன.
படப்பிடிப்புக்காக சில நாட்களில் இலண்டன் செல்லவிருப்பதாக தெரிவித்தார் த சன்டே இந்தியனிடம் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.
மேலும் பேசிய அவர், “சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உற்சாகத்துடன் கதை விவாதங்களில் கலந்துகொண்டார். படப்பிடிப்புக்குச் செல்வதற்கும் தயாராகிவிட்டார். கோச்சடையான் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறேன். இப்படம் தொடர்பான தொழில் நுட்பங்களை சௌந்தர்யா கவனித்துக் கொள்கிறார். அவர் இதற்காக சர்வதேச அளவில் அதிநவீன அனிமேஷன் தொழில்நுட்பம் பற்றி ஆய்வு செய்திருக்கிறார். அவதார் படத்தில் பணியாற்றிய வல்லுநர்கள் எங்கள் படத்தில் இருக்கிறார்கள். முதற்கட்டமாக இலண்டனில் படப் பிடிப்பை நடத்திவிட்டு சென்னைக்கு வந்து அடுத்த கட்டத்தை நடத்த இருக்கிறோம். இதுவொரு வரலாற்றுப் படம். எல்லாவற்றிலும் இப்படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய தளத்தை அறிமுகப்படுத்தும்” என்று சுருக்கமாகக் குறிப்பிடுகிறார். இன்னொரு தகவலும் உண்டு.
‘‘ராணா என்று எடுப்பதாக இருந்த படத்தின் கதைக்கு முன்கதைதான் கோச்சடையான். ராணா கதாநாயகன் பெயரே கோச்சடையான் ரணதீரன் என்பதுதான். அதுதான் ராணாவாக அழைக்கப்பட்டது. லண்டன், ஹாங்காங், ஹாலிவுட் ஆகிய இடங்களைச் சேர்ந்த மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பம் நிபுணர்கள் பீட்டர் ஜாக்சன் என்பவர் தலைமையில் ஹாங்காங்கில் தங்கி படத்திற்கான பணிகளில் ஈடுபடுபடப்போகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு முதற்கட்டப் பணிகளுக்காக ஹாங்காங் சென்று வந்திருக்கிறார் சௌந்தர்யா. சண்டைக்காட்சிகளை வடிவமைப்பு செய்கிறவர்கள் பிரிட்டிஷ்காரர்கள். அவர்களை ஒருங்கிணைப்பவராக நம்மூர் சண்டைப் பயிற்சியாளர் பீட்டர்ஹெய்ன் செயல்படுகிறார்’’ என்று சொல்கிறார் விவரமறிந்த ஒருவர்.
கோச்சடையானைப் பொறுத்தவரை சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளிவந்தது ரஜினிக்குத் தெரியாது என்று செய்திகள் வெளியாயின. “அதெல்லாம் பொய்யான தகவல். அப்பாவுக்கு அந்தக் கதை ரொம்பவும் பிடித்திருந்தது,” என்று டிவிட்டரில் பதில் சொன்னார் சௌந்தர்யா.
அதே டிவிட்டரில் திருமதி. லதா ரஜினிகாந்த்தும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் கணவரை மேக்கப் சேரில் உட்கார்ந்து பார்ப்பது மிகவும் சந்தோஷம் தருவ தாகச் சொல்லி டிவிட் செய்திருக்கிறார்.
கோச்சடையான் படத்திற்காக அலுவலக அளவில் பூஜை நடத்திவிட்டார்கள். ‘‘ராணா படத்திற்கு நடத்தியதுபோலவே பிரம்மாண்ட விழாக்களை நடத்த ரஜினி விருப்பப்படவில்லை. அவரது நோக்கம் முழுவதும் படத்தை பிரம்மாண்டமாக எடுத்து மக்களிடம் காட்டவேண்டும் என்பதாகவே இருக்கிறது. கடந்த மாதத்தில் ஒரு நாள் ஏவிஎம் ஸ்டுடியோவின் ஆறாவது புளோரில் படத்திற்கான போட்டோ ஷூட் நடந்தது. கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில், அவரது வரலாற்று கதாபாத்திரத்திற்கேற்ற விலையுயர்ந்த காஸ்ட்யூம்களில் ரஜினிகாந்தை படம்பிடித்திருக்கிறார் இப்படத்தின் இயக்குநரான சௌந்தர்யா. இப்படத்திற்கான கதையையும் அதுனுடன் கூடிய ஸ்டோரி போர்டையும் கணினியில் பார்த்த ரஜினிகாந்த், முழு படத்தையும் பார்த்த திருப்தி ஏற்பட்டதாகச் சொல்லியிருக்கிறார்’’ என்கிறார் நம்மிடம் பேசியவர்.
அதே மகிழ்ச்சியில்தான் ராணா படத்திற்கான கதையை கே.வி.ஆனந்திடம் எழுதச் சொன்ன சம்பவமும் நடந்துள்ளது. இதுபற்றி டிவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள ஆனந்த், ‘சுண்டெலி, சிங்கத்தை தூரத்திலிருந்து பார்க்கலாம். ரசிக்கலாம். கிட்டபோய் விளையாடற தகுதியெல்லாம் சுண்டெலிக்கு இல்லை’ என்றிருக்கிறார்.
ராணாவின் முதல் நாள் படப்பிடிப்பிலேயே படம் நின்று போனதால் தீபிகா படுகோனை மீண்டும் அழைக்க மாட்டார்கள் என்ற மூடநம்பிக்கை உடைந்திருக்கிறது. தீபிகாவை ரஜினி விடுவதாயில்லை. கோச்சடையானுக்கு தங்கையாக நடிக்கவிருந்த சிநேகா, அதே தேதிகளில் வேறொரு படப்பிடிப்பு இருப்பதால் அதிலிருந்து விலகிவிட்டார். இப்போது அந்த கதாபாத்திரத்தில் பொம்மலாட்டம் படத்தில் நடித்த, பாலேவும் பரதமும் தெரிந்த ருக்மணி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர்ஸ்டாரை சந்தித்துப் பேசிய சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், அவருடன் சேர்ந்து நடிக்கும் ஆசையை வெளிப்படுத்தினார். அது இப்போது நனவாகிவிட்டது. தனக்குக் கிடைத்த தெலுங்கு, கன்னடப் படவாய்ப்புகளைத் தள்ளிவிட்டு கோச்சடையானின் அரிதாரம் பூசக் காத்திருக்கிறார் சரத்குமார். வடிவேலுவை நடிக்க வைக்கலாம் என்று ரஜினியிடம் சொல்லப்பட, வீண் அரசியல் வதந்திகளும் செய்திகளும் மீடியாவில் வந்து படத்தின் கவனத்தைத் திசைதிருப்பும் என்பதால் மறுத்துவிட்டாராம்.
அதனால் சந்திரபாபு, நாகேஷ் இருவரில் ஒருவருடன் சேர்ந்து நடிப்பதுபோல புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் காட்சிகளை உருவாக்க யோசித்துள்ளனர். நாகேஷ் நடிப்பு மிகவும் பிடிக்கும் என்பதால் அவரை ஓகே செய்திருக்கிறாராம். அதற்கான பணிகளும் தொடங்கி விட்டனவாம். இந்தியாவின் முதல் ‘பர்மான்ஸ் கேப்சர் போட்டோ ரியலிஸ்டிக் பிலிம்’ என்று கோச்சடையான் என்று பட விளம்பரம் சொல்கிறது. இந்த பாணியை அவதார் படத்தில் ஜேம்ஸ் காமரூனும், அட்வென்சர்ஸ் ஆப் டின்டின் படத்தில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கும் பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
எப்போதும் ரஜினிகாந்த் படங்களில் ஏஆர் ரகுமானுடன் இணைந்து சூப்பர்ஹிட் பாடல்களைத் தந்துள்ளவர் கவிஞர் வைரமுத்து. இந்த முறை முந்தைய சூப்பர்ஸ்டார் படப் பாடல்களின் சாயல் ஏதுமில்லாத, அவற்றை ஞாபகமூட்டாத புதுமையான பாடல் வரிகளை எழுதப்போகிறாராம்.
திடீர் உடல்நலக்குறைவால் ராணா படம் நின்றுபோனதால், தற்போது உருவாகிவரும் கோச்சடையான் படத்தைப் பற்றிய தகவல்கள் அதிகமாக மீடியாவில் வெளிவராமல் சௌந்தர்யா பார்த்துக்கொள்கிறாராம். ஏனெனனில் மிகையான தகவல்களும் செய்திகளும் பழைய படத்தைப் போன்ற ஒரு தோற்றத்தைத் தந்துவிடும் என்ற அச்சம்தான் காரணம்.
முன்பைப்போல அதிக டேக்குகள் எடுத்து நடிப்பதற்கு ரஜினியின் உடல்நலம் ஒப்புக்கொள்ளாது என்பதால், அவருடன் நடிக்க இருக்கும் மற்ற நடிகர்களுக்கு படப்பிடிப்புக்கு ஒரு வாரத்திற்கு முன்பு ரிகர்சல் செய்யச் சொல்லியுள்ளார்களாம்.
ரஜினிகாந்த் பற்றிய பிரத்யேக இணையதளங்களான ரஜினிலைவ்.காம் மற்றும் என்வழி.காம் ஆசிரியர் எஸ் சங்கர் ‘தசஇ’யிடம் பேசும்போது, இது ஒரு முழுமையான டெக்னிக்கல் படம் என்கிறார். “தொழில்நுட்பத்தின் உச்சம் என்று சொல்லலாம். இந்தியாவில் வெறெந்த படத்துக்கும் செய்யத் துணியாத பல விஷயங்களைச் செய்கிறார்கள். அவர்கள் திட்டமிட்டபடி எடுத்தால் பெருமைக்குரிய படமாக இருக்கும். ரஜினிகாந்த் உண்மையிலேயே ஆர்வம் காட்டிவருகிறார். அவருக்குப் பதிலாக டூப் போடுகிறார்கள் என்பது பொய்யான செய்தி. தன்னால் முடியவில்லை என்றால் அந்த புராஜெக்ட்டை செய்யவேவேண்டாம் என்பதுதான் கே.எஸ்.ரவிக்குமாரிடம் ரஜினி நேரடியாக சொன்ன வார்த்தை. ரசிகர்களை ஏமாற்றவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் எப்போதும் கிடையாது” என்று உறுதியாகச் சொல்கிறார்.
புவனா ஒரு கேள்விக்குறி தொடங்கி ரஜினியை ஹீரோவாக வைத்து 25 படங்களை இயக்கிய மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், “எதுவாக இருந்தாலும் ரஜினி யோசித்துத்தான் முடிவெடுப்பார். நாம் சொல்வதை உள்வாங்கிக்கொண்டு பிறகுதான் கருத்துத் தெரிவிப்பார். அந்தக் காலத்திலிருந்தே ஒரு படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிலிருந்து அது ரிலீஸாகும் தேதி வரையில் அவருடைய உழைப்பும் ஈடுபாடும் குறையாது. சிவாஜி படப்பிடிப்பு சமயத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் அவருக்காக ஒரு கேரவான் நிறுத்தப்பட்டது. அதைப் பற்றி விசாரித்தவர், அதெல்லாம் எதுக்கு புதுப் பழக்கம். எப்போதும் நமக்குன்னு ஒரு மேக்கப் அறை இருக்கு. அதுபோதுமே என்று மறுத்துவிட்டார். இந்தக் குணம்தான் அவரை மக்கள் மனதில் ஒரு சூப்பர் ஸ்டாராக இடம்பெற வைத்திருக்கிறது. கோச்சடையானிலும் அது தொடரும்” என்கிறார் அவர்.
ரஜினியே நேரடியாக எல்லா வற்றையும் செய்யத் தேவையில்லாத, கிராபிக்ஸ் உத்தியில் வெளிவரும் இப்படத்தை அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? என்று சங்கரிடம் கேட்டோம். “கோச்சடையான் படத்தின் அறிவிப்பு வந்தபோது ரசிகர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் ஒரு பொம்மையைப்போல ரஜினி இப்படத்தில் வரப்போவதில்லை. அவருடைய உண்மையான பிம்பத்தை காட்டப்போகிறார்கள் என்று தகவலைக் கேள்விப்பட்டதும் மகிழ்ந்தோம். முத்து படத்தைப் போல இந்தப் படத்திலும் சூப்பர்ஸ்டார் படத்தின் எல்லா அம்சங்களையும் பார்க்கலாம் என்று கே.எஸ்.ரவிக்குமார் உறுதியளித்திருக்கிறார். இந்திய அளவில் வேறெந்த நடிகரும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடிக்க முன்வராதபோது துணிச்சலாக நடிக்கிற ரஜினியின் ஆர்வம் பாராட்டுக்குரியது. இது 100 சதவிகித சூப்பர் ஸ்டார் படமாக இருக்கும். அந்த நம்பிக்கையுடன் நாங்கள் காத்திருக்கிறோம்” என்கிறார்.






‘‘ஆனால் ரஜினி அசலான ரஜினி அல்ல. அவரது உருவ அமைப்பைப் படம்பிடித்துக்கொண்டு கிராபிக்ஸ் மூலம் காட்சிகளை அமைக்கப் போகிறார்கள். அவர், தன் நடிப்புலகப் புகழின் உச்சியில் இருக்கிறார். மிக முக்கியமான இக்காலகட்டத்தில் ரஜினியால் முழு வேகத்தில் நடிக்க இயலவில்லை. ஆனால் அவரது உருவத்தைப் பயன்படுத்தி உருவாக்கும் அனிமேஷன்கள் இதை நிரப்பும். ரசிகர்களை திருப்திப்படுத்துவதோடு கூடவே அவரது வர்த்தகச் சந்தையைப் பயன்படுத்திக்கொள்வதும் நடந்து விடும். இது சரியான வர்த்தகத் திட்டம். ஆனால் ரத்தமும் சதையுமான ரஜினியை திரையில் கண்ட ரசிகர்கள் அவரது போலியான பிம்பம் தோன்றும் படத்தை எப்படி ரசிப்பார்கள்? என்பதில் இருக்கிறது இப்படத்தின் எதிர்காலம்’’ என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத ஒரு சினிமா விமர்சகர்.
குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என சகலர் மனதிலும் அதிரும் பிம்பம் ரஜினி. தமிழில் முதன்முறையாக ஒரு நடிகர் மேம்பட்ட கார்ட்டூன் நாயகனாக மாறும் நிகழ்வாக அவர் கோச்சடையானில் அடியெடுத்து வைக்கிறார். இந்த சாகச நாயகன் அனிமேஷன் உருவமாக மாறுவதன் மூலம் காட்சி ஊடகத்தில் என்றென்றும் நீடிக்கப் போகிற பாத்திரமாக உருவாகிவிட்டார். அவரை வைத்து எதிர்காலத்தில் கார்ட்டூன் சீரியல்கள் கூட உருவாக்கப் படலாம். ஜாக்கிசான் கார்ட்டூன்களை சுட்டி டிவியில் பார்க்கும் உங்கள் வீட்டுக் குழந்தையிடம் இது பற்றிக் கேட்டுப்பாருங்கள்!
-நன்றி: த சன்டே இந்தியன்,சுந்தரபுத்தன்,envazhi.com..........

அமெரிக்காவில் பின்லேடன் உடல்: விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல்!

பாகிஸ்தானிலுள்ள அபோடாபாத்தில் சுட்டுக்கொல்லப்பட்டு, அரபிக்கடலில் புதைத்துவிட்டதாக அமெரிக்கா கூறிவரும் பின்லேடனின் உடல் அமெரிக்காவில் உள்ளதாக விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.







அமெரிக்கா, உலக நாடுகளில் அமைத்துள்ள தனது தூதரகங்களுடன் ரகசியமாக பரிமாறிக்கொண்ட கேபிள் தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது விக்கிலீக்ஸ். இத்தகவல்களில் அமெரிக்கா உலக நாடுகளுக்கு எதிராக ரகசியமாக மேற்கொண்ட பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களும் அடங்கியிருந்தன. இதனால், விக்கிலீக்ஸ் இணையதள அசாஞ்சேமீது பாலியல் குற்றச்சாட்டு முதலான பலவித குற்றச்சாட்டுகள் சுமத்தியும் விக்கிலீக்ஸ் இணையதளத்தைப் பல நாடுகளில் முடக்கச் செய்தும் அமெரிக்கா விக்கிலீக்ஸுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. எனினும் இதற்கு அசைந்து கொடுக்காத விக்கிலீக்ஸ், தற்போது அனானிமஸ்-விக்கிலீக்ஸ் என்ற பெயரில் மற்றொரு இணையதளத்தை உருவாக்கி, அமெரிக்காவுக்கு எதிராக மேலும் பல அதிர்ச்சியளிக்கும் ரகசிய தகவல்களை வெளியிட்டு வருகிறது.
இதில் தற்போது விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ள "பின்லேடன் உடல் அமெரிக்காவில் உள்ளது" என்ற அதிர்ச்சி தகவல் உலக நாடுகளிடையே பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய இத்தகவலுக்கு ஆதாரமாக ஒரு மின்னஞ்சலை அப்படியே வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ். அமெரிக்க அரசுக்காகவும் ராணுவம் மற்றும் உளவுப்பிரிவுக்காகவும் ஸ்ட்ராட்போர் என்ற நிறுவனம் பல்வேறு நாடுகளில் உளவு வேலை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் ரகசிய மின்னஞ்சல் பரிமாற்றங்களை வெளிப்படுத்தி வரும் விக்கிலீக்ஸ், ஸ்ட்ராட்போர் நிறுவனத்தின் ரகசிய பிரிவின் துணைத் தலைவர் பிரட் பர்ட்டன் தனது அதிகாரிக்கு எழுதியுள்ள மின்னஞ்சல் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அந்த மின்னஞ்சலில் பிரட் எழுதியுள்ளது பின்வருமாறு:
"கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி பாகிஸ்தானின் அபோடாபாத் நகரில் சுட்டுக் கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனின் உடல் அமெரிக்கா கூறியபடி கடலில் புதைக்கப்படவில்லை. மாறாக அந்த உடலைச் சோதனை செய்யும் நோக்கில் தனது தனி விமானத்தில் அமெரிக்காவுக்குக் கொண்டுவந்தது சிஐஏ.

முதலில் டெல்வேர் மாகாணத்தின் டோவர் நகருக்குக் கொண்டுவரப்பட்ட பின்லேடன் உடல், பின்னர் மேரிலாண்டின் பெதெஸ்டா பகுதியில் உள்ள ராணுவத்தின் நோய் தடுப்பியல் ஆராய்ச்சி மையத்துக்குக் (Armed Forces Institute of Pathology) கொண்டு செல்லப்பட்டது."
மேற்கண்டவாறு அந்த மின்னஞ்சலில் பிரட் தன் அதிகாரிக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கே தெரியாமல் ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின்மூலம் பின்லேடனைச் சுட்டுக்கொன்றதாக கூறிய அமெரிக்கா, இஸ்லாமிய முறைப்படி இறுதி சடங்குகள் செய்து அரபிக்கடலில் பின்லேடன் உடலைப் புதைத்துவிட்டதாக கூறியது.
அமெரிக்காவின் இக்கூற்று உலக அளவில் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. சுட்டுக்கொல்லப்பட்டதாக முதலில் வெளியிடப்பட்ட பின்லேடனின் புகைப்படம், கணினி மென்பொருள் மூலம் உருவாக்கப்பட்ட போலி படம் என்பது நிரூபணமாகியதோடு அமெரிக்கா கூறும் தகவலில் பொய்யுள்ளது என்ற குரல் ஒலிக்கத்துவங்கியிருந்தது.
இந்நிலையில், தற்போது விக்கி லீக்ஸ் வெளிப்படுத்தியுள்ள இத்தகவல் அமெரிக்கா, தான் சுட்டுக்கொன்றதாக கூறும் பின்லேடன் உண்மையில் பின்லேடன்தானா என்பதில் சந்தேகம் இருந்ததால் அதனை உறுதிபடுத்திக்கொள்வதற்காக அந்த உடலை அமெரிக்கா கொண்டு சென்று ரகசிய இடத்தில் வைத்துள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுவரை இது குறித்து எந்தத் தகவலும் அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா வெளியிடாததால், சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறுவது உண்மையில் பின்லேடன்தானா என்ற சந்தேகத்தை மேலும் அதிகமாக்கியுள்ளது.





செய்திகள் at www.inneram.com