November 25, 2011

ஸ்டீபன் ஹாஃக்கின்ஸ் என்றொரு தன்னம்பிக்கை.

தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக ஸ்டீபன் ஹாஃக்கின்ஸை தாராளமாக கூறலாம்.மொத்த உடலுமே இயங்காத நிலையில் அண்டத்தை பற்றி பல புத்தகங்கள் காலத்தைப் பற்றிய ஆராய்ச்சி என மனிதர் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார்.எனக்கு ஹாஃக்கின்ஸ் அறிமுகமானது டிஸ்கவரி தொலைக்காட்சி மூலமாகத்தான்.இந்த சாதனை மனிதரைப் பற்றி சில குறிப்புகள் http://ewow.lk இணையத்தின் உதவியுடன் கீழே.


2005-ம் ஆண்டு வீல் நாற்காலியில் அமர்ந்தபடி தொலைக்காட்சி நிலையத்துக்கு செவிலியர்கள் துணையுடன் வந்தார் 63 வயதான ஸ்டீபன் ஹாஃக்கின்ஸ்.கை,கால்,வயிறு,தலை என உடலின் எந்தப் பாகமுமே செயல்படாத நிலை.அவரது வீல் நாற்காலியில், வலது கண் அசைவின் மூலமாக இயங்கும் கணினியும், வாய்ஸ் ஸென்சரும் இருந்தது. பிரிட்டிஸ் டே டைம் டாக் ஷோ நிகழ்ச்சி நடத்திய ரிச்சர்ட் மற்றும் ஜூடி கேட்ட கேள்விகளுக்கு கணணி மூலம் எளிதாகப் பதில் சொன்னார் ஸ்டீபன்.
‘‘பெருவெடிப்பு எனப்படும் ‘பிக் பாங்’ ஏற்படும் முன்னர்,அண்ட வெளியில் என்ன இருந்தது?’’ என்று கேட்டார் ரிச்சர்ட். ‘‘வட துருவத்தின் வடக்கில் என்ன இருக்குமோ அது!’’என்று சாதுர்யமாகப் பதில் சொல்லி அனைவரையும் அசத்தினார் ஸ்டீபன். கை தட்டிப் பாராட்டியவர்கள், ‘‘வாழ்க்கை எப்படி இருக்கிறது?’’ எனக் கேட்டார்கள். ‘‘முன்னை விட சுவாரஸ்யமாகவும், சவால் நிறைந்ததாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது’’ என்றார். ‘‘இந்த உடல் நிலையுடன் உண்மையில் சந்தோஷமாக இருக்க முடியுமா?’’ என்று தயங்கித் தயங்கிக் கேட்டார்கள். ‘‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’’ என்றார் ஸ்டீபன்.


பிரிட்டனில் 1942-ம் வருடம் பிறந்த ஸ்டீபன், படிப்பில் படு சுட்டியாக இருந்தார். ஆக்ஸ்ஃபோர் யூனிவர்சிட்டியில் மூன்றாவது வருடம் படித்துக் கொண்டு இருந்தபோது, தன் உடல் தளர்ந்திருப்பதை உணர்ந்தார். காரணமின்றி அடிக்கடி கீழே விழுந்தார்.21-வது வயதில் உடலெங்கும் தசை மாதிரிகளை வெட்டி எடுத்துப் பரிசோதித்தும், மருத்துவர்களால் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்துக்கு மேல் உயிர் வாழ முடியாது என்பதை மட்டும் தீர்மானமாகச் சொன்னார்கள்.
துயரத்திலிருந்த ஸ்டீபனுக்கு எதிர் வார்டில் ஒரு சிறுவன் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டான். சில நாட்களிலேயே எதிர்பாராமல் நிகழ்ந்த அந்தச் சிறுவனின் மரணம், ஸ்டீபனுக்கு பயம் தருவதற்குப் பதிலாகத் தைரியம் கொடுத்தது. அந்தச் சிறுவனைவிட தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்தார். உடல் தன் கட்டுப்பாட்டில் இல்லா விட்டாலும் மூளையும் சிந்தனையும் முழு உற்சாகத்துடன் இருப்பதை உணர்ந்தார். வீல் நாற்காலியில் இருந்தபடியே பல்கலைக் கழக ஆய்வினை முடித்து,பேராசிரியர் ஆனார். திருமணம் முடிந்து, மூன்று குழந்தைகளும் பிறந்தன.
ஏ.எல்.எஸ். எனக் கண்டறியப்பட்ட நரம்பு நோய் முற்றியதால், 1985-ம் வருடம் அவரது உடல் முழுமையாகச் செயலிழந்தது. ஆனாலும், நம்பிக்கை இழக்காமல் வலக்கண்ணை மட்டுமே அசைத்து எழுத்துக்களை அடையாளம் காட்டிப் பாடம் நடத்தியதுடன், வரலாற்றுத் திருப்பு முனையான புத்தகம் ஒன்றும் எழுதினார். ‘எப்ரீஃப் ஹிஸ்ட்ரி ஆஃப் டைம்’ என்கிற அந்தப் புத்தகம் ஸ்டீபனின் புகழை உச்சிக்கு உயர்த்தியது. கலிஃபோர்னியாவைச் சேர்ந்த கணினி நிபுணர் ஒருவர் ஸ்டீபனின் கண்ணசைவுக்கு இயங்கும் கணணி மென்பொருள் கண்டு-பிடித்து, வீல்சேரில் பொருத்தித் தர,சிரமம் குறைந்து அதிகமாகச் சிந்தித்து நிறைய எழுதிக் குவித்தார் ஸ்டீபன்.
‘காலம் எப்போது தொடங்கியது? எப்போது முடியும்? காலத்தை பின்னோக்கிச் சென்று காண முடியுமா? விண்வெளிக்கு எல்லை உண்டா?’ என எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக பதில் சொல்லி மலைக்க வைத்த ஸ்டீபன் ஹாஃக்கின்ஸின் வாழ்வு, மருத்துவர்களுக்கு இன்றும் ஒரு புதிர்தான். உடல் நிலை மோசமான காலகட்டத்தில் மனைவியும், குழந்தைகளும் அவரை விட்டுப் பிரிந்தனர். ஸ்டீபன் அப்போதும் மனம் தளராமல், தன்னை அன்புடன் கவனித்துக் கொண்ட நர்சை இரண்டாவதாகத் திருமணம் முடித்தார்.
‘‘இந்த நோயால் பாதிக்கப்பட்டதால்தான் வெளி உலக கவனச் சிதறல்கள் இல்லாமல், முழுக் கவனமும் செலுத்தி என்னால் புத்தகங்கள் எழுத முடிகிறது. உண்மையில் நான் அதிர்ஷ்டம் செய்தவன்’’ என்று ஸ்டீபன் நம்பிக்கையுடன் பேசக் காரணம், ‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; எது மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’ என்கிற மந்திரச் சொல்லின் மகத்துவம் தான்!

நன்றி.www.ewow.lk

உலகின் பிரம்மாண்டமான பத்து நதிகள்.

மனித நாகரீகம் தோன்றியதே நதிக் கரை ஓரங்களில்தான் என்று வரலாறு கூறுகிறது.அப்படிப்பட்ட இயற்கையின் அற்புதமான ஆறுகளின் சில புகைப்படங்கள்.

நைல் நதி.எகிப்த்


எகிப்தில் உருவாகும் நைல் நதி சூடான் , புருண்டி , ருவாண்டா , காங்கோ , தன்சானியா , கென்யா , உகண்டா , எத்தியோப்பியா ஆகிய நாடுகள் வழியாக பாய்கிறது.
நீளம் 6,650கிமீ

அமேசான் ஆறு.பிரேசில்


இது உலகிலேயே அகலமான ஆறாகும்.அமேசான் அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கும் பொழுது, நொடிக்கு 300,000 கன மீட்டர் நன்னீரைக் கொண்டு சேர்க்கின்றது.அமேசான் ஆற்றின் நீரின் அளவு மிசிசிப்பி,நைல், மற்றும் யாங்சே ஆகிய நதிகளின் மொத்த அளவை விட அதிகம். இதன் நீளம் 6400 கி.மீ


யாங்சே ஆறு.சீனா


யாங்சே ஆறு அல்லது சாங் ஜியாங் ஆசியாவிலேயே மிகவும் நீளமான ஆறு ஆகும். சீனாவின் வணிக தலைநகரான சாங்காய் இதன் கழிமுகத்தில் உள்ளது.நீளம்.6,300 கி.மீ இது சீனாவின் மேற்குப்பாகத்தில் உள்ள குவிங்காய் மாகாணத்தில் தொடங்கி கிழக்கு நோக்கி ப் பாய்ந்து கிழக்கு சீனக்கடலில் கலக்கிறது.

மிசிசிப்பி ஆறு.அமெரிக்கா


வட அமெரிக்காவின் மிகப் பெரிய ஆற்றுத் தொகுதியும், உலகின் பெரிய ஆற்றுத் தொகுதிகளுள் ஒன்றுமாகிய ஜெபர்சன் - மிசூரி -மிசிசிப்பி ஆற்றுத் தொகுதியின் ஒரு பகுதியாகும். நீளம். 6,275 கிமீ.


யெனிசெ.அங்காரா

இந்நதி 5,539 கிமீ நீளம் உடையது.

மஞ்சள் ஆறு (ஹுவாங் கி)சீனா


நீளம்.5,464 கிமீ. சீனாவின் துயரம் எனவும் இந்நதி குறிப்பிடப்படுகிறது.

ஓப்- இர்டிச்.
ரஷ்யா



இந்நதியின் நீளம். 5,410 கிமீ ஆகும்.

காங்கோ-ஜாம்பசி .மசாக்கா


4,700 கிமீ, நீளம் கொண்ட இந்நதி அங்கோலா,புருன்டி,கேமரூன்,ருவான்டோ,தான்சானியா,சிம்பியா, போன்ற நாடுகளை வளப்படுத்துகிறது.


ஆமுர்-ஆர்கன் . ரஷ்யா,சீனா


இந்நதி.ரஷ்யா,சீனா,மங்கோலியா ஆகிய நாடுகளில் பாய்கிறது. இதன் நீளம்.4,444 கிமீ.


லெனா . ரஷ்யா


இந்நதி ரஷ்யாவை வளப்படுத்துகிறது.இதன் நீளம்.4,400 கி.மீ.

November 24, 2011

ஊழல் அரசியல் வாதிகளே ஜாக்கிரதை.

இதுவரை தலைவர்கள் மீது கோபத்தையோ எதிர்ப்பையோ காட்ட அவர்களைப்பற்றி கேவலமாக திட்டுவார்கள் அல்லது கையில் கிடைத்த கல்லோ மண்ணோ ஏன் காலணியாகக் கூட இருக்கலாம் இது போன்ற ஆயுதங்களை உபயோகிப்பார்கள். இது நேற்று வரை இன்று முதல் புது முயற்சியாக ஒண்டிக்கொண்டி நேரடித்தாக்குதல்தான் அப்படி சமீபத்தில் தாக்கப்பட்டவர் இந்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார்.முதுகில் ஒரு உதையோ நெஞ்சில் ஒரு குத்தோ வாங்கிக் கொள்ளலாம்.ஆனால் கன்னத்தில் வாங்கிக் கொள்ளும் அறையென்பது மேலே குறிப்பிட்ட இரண்டு தாக்குதல்களையும் விட கொஞ்சம் அவமானம் அதிகம்.இந்த அவமானகர செயலை சரத்பவாருக்கு எதிராக நிகழ்த்தியிருப்பவர் ஹர்விந்தர் சிங் என்ற இளைஞர்.


மனதில் எவ்வளவு தைரியமும், கோபமும் இருந்திருந்தால் இந்த செயலை செய்திருப்பார்.தாக்குதலுக்கான காரணமாக ஹர்விந்தர்சிங் கூறியதாவவது.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் சரத்பவாரே காரணம் என்றும்,
சரத்பவாரை கொல்லதான் நினைத்தேன் என்று கூறிய அவர் மேலும் விளம்பரத்துக்காக அவர் கன்னத்தில் அறையவில்லை. என்றும், நாட்டின் எல்லா பகுதிகளிலும் ஊழல் தலை விரித்து ஆடுகிறது. அதை தன்னால் பொறுத்தக் கொள்ள முடியவில்லையென்றும் ஆவேசமாக கூறினார்.
இறுதியில் தன் கையையும் கத்தியால் கிழித்துக்கொண்டார்..
இதே ஹர்விந்தர் சிங்தான் ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராம் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நமக்கும் இதுபோல சில அரசியல்வாதிகளை மூக்கில் குத்த வேண்டும் என்று ஆசை இருக்கும் .நிறேவேறாத ஆசை என்று தெரிந்தே ஆசைப்படுவோம்.ஆனால் ஹர்விந்தர்சிங் போன்ற ஒரு சிலர் தங்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளின் கொடுமைகளை சட்டை செய்யாமல் உச்சபட்ச தைரியத்துடன் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

இந்த செயல் மாற்றுக் கருத்தே இல்லாத தவறான செயல்தான் என்பதில் ஐயமில்லை.லட்சகணக்கான மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஒரு மத்திய அமைச்சரை பொது இடத்தில் தாக்குவது என்பது ஜீரணித்துக் கொள்ள முடியாத விசயம்தான்.பாவம் ஹர்விந்தர் சிங் தன் எதிர்ப்பைக் காட்ட இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை போலும்.ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே போன்றோர் மக்களை திரட்டி போராடுகிறார் என்றால் ஹர்விந்தர்சிங் போன்ற சிலர் தனிமனிதராக களத்தில் இறங்கி ஆபத்தை சந்திக்கிறார்கள். ஹர்விந்தர் சிங்கை நினைத்து உள் மனதில் ஓரமாக பாராட்டினாலும்,அவரின் செயலுக்காக கிடைக்கும் துன்பங்களுக்கு வெளிப்படையாக பரிதாபப்படத்தான் முடிகிறது.




சரத்பாவர் பற்றி,


மூன்று முறை மஹாராஷ்டிர மாநில முதல்வராக இருந்துள்ளார்.2005 முதல் 2008 வரை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பொறுப்பில் இருந்திருக்கிறார்.பல முறை மத்திய அமைச்சர் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.இந்தியாவின் டாப் ஊழல்களான முத்திரை தாள் மோசடி முதல் தற்போதுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வரை இவரது பெயர் அடிப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


என்னுடைய சந்தேகம்.


இது போன்ற செயல்கள் ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்குமா அல்லது இதெல்லாம் அரசியல்ல சாதரணமப்பா என்று எடுத்துக்கொள்வார்களா?ஹர்விந்தர் சிங்கின் தாக்குதலுக்கு எதிராக நிறைய அரசியல் வாதிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.நாளை அவர்கள் மூஞ்சியுலும் யாராவது கை வைத்து விடுவார்கள் என்ற பயமாக இருக்கலாமோ?

November 15, 2011

பெட்ரோல் விலை குறைந்து விட்டதா?ஆச்சர்யமாக இருக்கிறதே.

கடந்த 3 ஆண்டுகளில் முதல் முறையாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.85 குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான வரியும் சேர்த்து சென்னையில் ரூ.2.35 குறைந்துள்ளது. இது நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.


கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், பெட்ரோல் விலையை நிர்ணயிப்பதில் மத்திய அரசு தனக்குள்ள அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமே ஒப்படைத்தது. அதன் பிறகு, இதுவரை 10க்கும் மேற்பட்ட முறை பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்திருக்கின்றன.
அமெரிக்க டாலருக்கு இணையாக ரூபாய் மதிப்பு சரிவால், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரித்ததாகவும், டிசம்பர் மாதத்துக்கான கச்சா எண்ணெய் இறக்குமதி விலை உயர்ந்ததாகவும் கூறி, கடைசியாக இம்மாதம் 3ம் தேதி பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.1.82 உயர்த்தின. விலை உயர்வுக்கு எதிர்க் கட்சிகள் மட்டுமின்றி ஐ.மு.கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி எச்சரித்தார். இதுதொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கை திரிணாமுல் எம்.பி.க்கள் சந்தித்து பேசினர். எனினும், விலை உயர்வை வாபஸ் பெற இயலாது என்று அவர்களிடம் பிரதமர் கைவிரித்தார். இதையடுத்து, இனி பெட்ரோல்விலையை உயர்த்தினால் அரசில் இருந்து விலகுவோம் என்று மம்தா கூறினார்.
அப்போது ஒரு பேரல் 121.67 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 115.85 டாலராக குறைந்துள்ளது. எனவே, பெட்ரோல் விலையை குறைக்க இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது.
எனினும், பெட்ரோல் விலை குறைய வாய்ப்பே இல்லை என்றும், எண்ணெய் நிறுவனங்கள் அதிக நஷ்டம் அடைவதால் அது சாத்தியமாகாது என்றும் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று முன்தினம் கூறினார். அதே கருத்தை பிரதமர் மன்மோகன்சிங்கும் தெரிவித்திருந்தார். ‘பெட்ரோல் விலையை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை’ என்றார் அவர்.
இந்நிலையில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 வரை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலித்து வருவதாக நேற்று முன்தினம் இரவு முதல் தகவல்கள் வெளிவந்தபடி இருந்தன. இதுபற்றி டெல்லியில் நேற்று காலை பெட்ரோலிய அமைச்சக உயரதிகாரி ஒருவர்கூறுகையில், ‘சர்வதேச சந்தை நிலவரப்படி பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கின்றன. இப்போது கச்சா எண்ணெய் விலை சிறிது சரிந்துள்ள நிலையில் அதன் பலனை நுகர்வோருக்கு அளிக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டிருக்கலாம்’ என்றார்.
இந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்களின் மாத ஆய்வு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. அதில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களின் உயரதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் பெட்ரோல் விலையை குறைத்துக் கொள்ள முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.85 குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் நேற்று மாலை அறிவித்தன. அதன்படி, விலையுடன் வரியும் குறைவதால் சில்லரை விற்பனையில் விலை அதிகபட்சமாக ரூ.2.35 வரை குறையும் என்று தெரிவித்தன. சென்னையில் பெட்ரோல் விலை ரூ.2.35 குறைந்து ரூ.72.73ல் இருந்து ரூ.70.38 ஆகியுள்ளது. 2009க்கு பிறகு கடந்த 33 மாதங்களில் (சுமார் 3 ஆண்டுகள்) முதல் முறையாக பெட்ரோல் விலை குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போதைய விலை புதிய விலை குறைப்பு
சென்னை ரூ.72.73 ரூ.70.38 ரூ.2.35
டெல்லி ரூ.68.64 ரூ.66.42 ரூ.2.22
கொல்கத்தா ரூ.73.15 ரூ.70.84 ரூ.2.31
மும்பை ரூ.73.81 ரூ.71.47 ரூ.2.34
மாதம் உயர்வு
2010
ஏப்ரல் ரூ.0.52
ஜூன் ரூ.3.68
செப்டம்பர் ரூ.0.37
அக்டோபர் ரூ.0.76
டிசம்பர் ரூ.3.26
2011
மே ரூ.5.00
செப்டம்பர் ரூ.3.00
நவம்பர் 3 ரூ.1.82
2006ல் விலை ரூ.52.71
2011ல் நேற்று ரூ.70.38

செய்திகள்.www.dinakaran.com

2011 ஆண்டின் மிகப்பெரிய ஆச்சர்யமாக இந்த செய்தியை சொல்லலாம்.தற்போது கூட பெட்ரோல் விலை அதிகரித்ததற்கு கூட மக்களிடையே எதிர்ப்பு கிளம்பினாலும் கிளம்பிய வேகத்திலேயே அடங்கியும் விட்டது.மாதா மாதம் இதைத்தானே பண்றீங்க என்ற எண்ணத்தினால் கூட இருக்கலாம்.அப்படி நோந்து போயிருந்த மக்களுக்கு இந்த செய்தி ஆச்சர்யமானதாகத்தான் இருக்கும்.பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று வீதிக்கு வந்து போராடினால் கண்டு கொள்ளாத அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் இப்போது அவர்களாகவே பெட்ரோலின் விலையை குறைத்திருக்கிறார்கள்.

எனக்கென்னவோ இதுல சந்தேகமாதான் இருக்கிறது .குறைக்கிற மாதிரி குறைத்துவிட்டு பின்னாடி விலையை மேலும் அதிகரிப்பார்களோ.

எது எப்படியோ நல்லது நடந்தா சரி.

நீர் மூழ்கிக் கப்பல் ஒரு பார்வை.

சம்மரின் எனப்படும் நீர் மூழ்கிக் கப்பல் தண்ணீரில் அமிழ்ந்து செல்கிறது.பின் நீர் மட்டத்திற்கு வருகிறது.இந்த இரு இயக்கங்களும் ஆர்க்மிடிஸ் கண்டுபிடித்த கொள்கையின் விதிமுறையின் படியே நடைபெறுகின்றன.இந்த இயக்கங்கள் செம்மையாக நடைபெறும் படி சம்மரின் அமைக்கப்பட்டுள்ளது.

நீர் மூழ்கிக்கப்பல் தண்ணீரில் அமிழ்வதற்கு தேவையான நடவடிக்கை மிகவும் எளிதானது.நீர் மூழ்கிக்கப்பலின் எடை அதை மிதக்க வைக்கும் தண்ணீரின் சக்தியை விட அதிகரிக்கும் படி செய்கிறார்கள்.நீர் மூழ்கிக்கப்பலை மிதக்க வைக்கும் காற்று அடங்கிய டாங்குகளில் கடல் தண்ணீரை நிரப்புகிறார்கள்.காற்றின் இடத்தை கடல் நீர் எடுத்துக் கொள்கிறது.நூற்றுக் கணக்கான டன் எடையுள்ள தண்ணீர் டாங்குகளில் நிறைகிறது.அதன் விளைவாக நீர் மூழ்கிக் கப்பலின் எடை அதிகரிக்கிறது.அதன் இருப்பில் உள்ளதாகக் கருதப்படும் மிதக்கும் திறன் அகற்றப் படுகிறது.நீர் மூழ்கிக் கப்பல் மிதக்கும் போதும் முழுமையாக அமிழும் போதும் இடப்பெயர்ச்சி ஆகும் தண்ணீரின் எடைக்கு இடையே உள்ள வித்தியாசம்.


நீர் மூழ்கிக் கப்பல் ,அதன் டாங்குகளில் உள்ள தண்ணீர் இரண்டின் எடையும் சேர்த்து இடப்பெயர்ச்சி ஆகும் தண்ணீரின் எடையை விட அதிகமாக இருந்தால் கப்பல் மூழ்கிவிடும்.அதிக பட்சமாக நீ.கப்பல் 600 அடி ஆழம் வரை செல்லலாம்.அதை விட ஆழத்திற்குச் சென்றால் நீ.கப்பலின் உடற்பகுதியை தண்ணீர் வலுவாக அழுத்தும் அபாயம் ஏற்படும்.
நீ.கப்பலை ஒரு குறிப்பிட்ட ஆழத்தில் நிறுத்தி வைப்பதற்கு மின்சார மோட்டார்கள் மூலம் கப்பலிலிருந்து தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.அதாவது நீ.கப்பலின் எடை,இடப்பெயர்ச்சி ஆகும் தண்ணீரின் எடைக்குச் சமமாகும் வரை தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.அப்போது நீ.கப்பல் மேல் நோக்கியும் நகராமல் கீழ் நோக்கியும் நகராமல் சம நிலையில் மிதக்கும்.நீ.கப்பல் மேல் மட்டத்திற்கு வருவதற்கு டாங்குகளில் உள்ள தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி விடுவார்கள்.அப்போது நீ.கப்பலின் எடை,இடப்பெயர்ச்சி ஆகும் தண்ணீரை விட இலேசானதாகிவிடுகிறது .இதனால் நீ.கப்பலும் மேல் மட்டம் வந்து விடுகிறது.


இதுதான் நீர்மூழ்கிக்கப்பல் இயங்கும் விதம்.