இரண்டுபேர் ஒரு பையனைப்பற்றி பேசிட்டு இருந்தாங்க ..அந்த பையன் இருக்கானே ரொம்ப நல்லவன் ஒரு கெட்டப்பழக்கம் கிடையாது .தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருப்பான் ..எந்த சண்டை சச்சரவுக்கு ஒண்ணும் போறதில்லை ரொம்ப அமைதியான பையன் .சிக்கனம்னா என்னானு அவன்கிட்டதான் படிக்கணும் அவ்வளவு சிக்கனம் . அவனை நம்பி பொண்ணு கொடுக்கலாம் அப்படி இப்படினு ஆகா ஓகோன்னு பேசிட்டு இருந்தாங்க ..இத கேட்டுட்டு இருந்த நான் அண்ணே அந்த அரிசி வியாபாரி பையனைப் பற்றிதானே பேசுறீங்க ..
.
ஆமாப்பா ..
.
ஆமாண்ணே அந்தபையன் ரொம்ப நல்லவன் .பாருங்களேன் போனவாரம் நோயாளி ஒருத்தருக்கு இரத்தம் தேவைப்பட்டுச்சு ..இவனுக்கு அதே வகை ரத்தம்னு இவனிடம் கேட்டதற்கு உடனடியாக தன்னையே நோயாளி ஆக்கிட்டாண்ணே ..காய்ச்சல் பீச்சல்னு ....
.
இதுல என்னடா தப்பு இருக்கு தன் உடம்பு பாதிக்கப்பட்டிருந்ததால இரத்தம் கொடுக்க தயங்கினான் அவ்வளவுதானே ....
.
ஆமாண்ணே அவன் நல்லவனாச்சே அதான் தரமுடியாதுன்னு சொலறதுக்கு பதிலா தரக்கூடிய சூழ்நிலையில் இல்லையென சுத்தி சொன்னான் அவ்வளவுதான் .....
.
ஆமாடா அவன் இரத்தம் கொடுக்க முன்வரவில்லை என இவ்வளவு நாசூக்கா கேலி பண்றியே நீ எத்தனை பேருக்கு எத்தனை லிட்டர் இரத்தம் கொடுத்துருக்க சொல்லு பார்க்கலாம் .....
.
இந்த கேள்வி என் நெஞ்சில் இடியாய் இறங்கியது ...அந்த இடியின் பாதிப்போடு சொன்னேன்.....அண்ணே இன்னும் யாருக்கும் இரத்தம் கொடுக்கலண்ணே .......
.
தம்பி கரியை நம்ம மூஞ்சில வச்சுட்டு அடுத்தவன் மூஞ்சி கரியை பாக்கக்கூடாது சரியா ....
.
சரிண்ணே ....
.
.
கொஞ்சம் உண்மை கொஞ்சம் கற்பனை தொகுப்பிலிருந்து .....
October 20, 2014
கரி கரியாய் கரணமாம் ...
October 8, 2014
ஆடை என்ற போலி திரை
நானும் கொஞ்சநாளா பார்த்துட்டே இருக்கேன் இந்த அரைகுறை ஆடைப் பிரச்சினை ஓய்ந்தபாடில்லை ..தொலைக்காட்சியை திறந்தா அங்கும் இதுதான் ஓடுது பேஸ்ப்புக்கை திறந்தா இங்கும் அதுதான் ஓடுது ...கொய்யால ஐம்பது வருசத்துக்கு முன்னாடி வெறும் புடவையை மார்பை சுற்றிக்கொண்டு அலைந்தபோது எந்த நாதாரியும் நாகரீகத்தைப் பற்ற பேசவில்லை ..அப்போது ஜாதி துணைநின்றது ..இப்போது கலாச்சாரத்தை துணைகளைக்கிறார்கள் ..ஆடைதான் ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தை தீர்மானிக்கிறது என்றால் அப்படிப்பட்ட ஆணியே வேண்டாம் என்பதே எண்ணம் ...
பாதி மார்பு வெளியே தெரிய வலம் வரும் கறுப்பு வெள்ளை தேசத்தில் எந்த ஆடவனும் ஆடை குறைவாக இருக்கிறதென்று குறுகுறுவென பார்த்தாக எந்தச் செய்தியும் சொல்லவில்லை ..மாறாக நம் சமூகத்தில் மில்லி மீட்டர்கள் மிடி உயரும் நேரம் பார்த்தது சென்டிமீட்டர்கள் உள்ளம் கேட்குமே மோர் ..என்ற வரிகளுக்கேற்பதான் நாம் வடிவமைக்கப்பட்டிருக்கிறோம் ..நம் வடிவம்தான் மாறவேண்டுமே தவிர ஆடைகளுக்கான வடிவமல்ல ..கோணலோ நேரோ அதை பார்க்கும் பார்வையே தீர்மானிக்கிறது .
.
இப்படிக்கு...
நேராகப் பார்க்க முயற்சிப்பவன் ....
October 5, 2014
நண்பன் ..
நேற்று இரண்டு நண்பர்களுக்கு பிரச்சினையாம் .கொஞ்நேரம் கழிச்சு ஒரு நண்பன் வந்து அவர் தரப்பு நியாங்களையும் எதனால் கோபமடைந்தேன் என காரணங்களையும் விவரித்தார் .. . நான் அமைதியாக கேட்டுக்கொண்டே இவ்வளவு மோசமாகவா நடந்துகொண்டான் அவன் அப்படிப்பட்ட ஆள் இல்லையே உன்னைமாதிரி நல்ல குணமுள்ளவனாச்சே என சொல்லி பேச்சை முடித்தேன் ... . இன்னும் கொஞ்ச நேரம் கடந்து சண்டயிட்ட மற்றொரு நண்பனும் வந்தான் ....அவரும் முதலாமவர் போலவே பல சிலவற்றை அடுக்கினார் ..நானும் முதலாமவருக்கு சொன்ன அதே வசனத்தை சொல்லி நாளை சந்திப்போமென நகர்ந்தேன் ... . இன்னைக்கு பார்க்குறேன் இரண்டுபேரும் கைகோர்த்துட்டே டாஸ்மாக் நோக்கி வேகமா நடந்துகிட்டு இருந்தாங்க ... அதைப்பார்த்து கொஞ்சம் அதிர்ச்சிதான் நேத்து அந்தமாதிரி திட்டிகிட்டவங்க இன்று இந்த மாதிரி போனா அதிர்ச்சி வராம என்ன வரும் .....நான் நேரா அவர்களை பார்ல போய் பிடிச்சேன் (சத்தியமா நான் குடிக்குறதுக்காக அங்கு போகல அவங்ககிட்ட பேசறதுக்குதான் போனேன் .பேசிப்பேசி பேசிப்பேசி..... ) ஏண்டா நேத்து அவ்வளவு அசிங்கமா திட்டிக்கிட்டீங்க இன்னைக்கு புருஷன் பொண்டாட்டி மாதிரி குலாவிட்டே போறீங்க நீங்க சொல்றதல்லாம் கேக்குறவன் கேணையானாடா ..என கோபமாக கேட்டன் ..... . எதிர்ல இருந்தவன் சிரிச்சுகிட்டே மற்றவரிடம் சொல்கிறான் ...மச்சான் நம்ம ரெண்டு பேரோட சிந்தனையும் செயலும் ஒரே பாதையில் போகுதுல்ல ...பார் நேத்துகூட ஒரே கேணைய ரெண்டுபேரும் தெரிவு செய்துருக்கறோம்ன்னு சொல்லிக்கிட்டு ஹாஹாஹா சிரிக்குறானுங்க .... இதைப்பார்த்து என்னால் என் கோபத்தை அடக்கவே முடியவில்லை ...படார்னு எதிரில் இருந்த மதுபுட்டிய எடுத்தேன் .அப்படியே உடைச்சேன் சிசிசிசி திறந்தேன் ..கப்புல ஊத்தி குடிச்சேன். .அவனுங்களுக்கு கொஞ்சம்தான் கொடுத்தேன் ...இதுதான் சரியான தண்டனை அவர்களுக்கு ....... . . கொஞ்சம் உண்மையும் கொஞ்சம் கற்பனையும் ..தொகுப்பிலிருந்து ....
May 23, 2014
கோச்சடையான் விமர்சனத்தின் விமர்சனம் .
April 8, 2014
கேவலமான அரசியல் அதிகாரிகள்
அதிகாரிகளிடம் கும்பிடு போடுகிறார்கள் அல்லது மக்கள் கும்பிடு போட
வேண்டுமென அதிகாரிகள் காட்டாயமாக எதிர்பார்க்கிறார்கள்,அதே அரசு
அதிகாரிகள் அரசியல்வாதிகளிடம் கூழைகும்பிடுப்
போட்டுத்திரிகிறார்கள்.எவருக்குமே மனிதாபிமானமும் இல்லை இரக்கமும்
இல்லை.குறிப்பாக அரசு அதிகாரிகளுக்கு.
இரண்டு நாட்களுக்கு முன் என் மாமா வாகன விபத்தில் மரணமடைந்து
விட்டார்.சாலைன் ஓரமாக நடந்துசென்று கொண்டிருந்த அவர் மீது அதுமீறலாக
வாகனத்தில் அலங்கார வளைவை ஏற்றி வந்ததால் அதில் ஒரு பகுதி வெளியே
நீட்டிக்கொண்டிருந்திருக்கிறது அப்பகுதி மோதியதால் சுழற்றப்பட்ட அவர்
வாகனச் சக்கரங்களுக்கிடை விழுந்ததால் கோரமே நிகழ்ந்து விட்டது..இதற்கு
முதல் காரணம் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்காத
அதிகாரிகள்தான்.எத்தனையோ விபத்துகள் இப்படி நடந்தும் அதிகாரிகள்
மெத்தனமாகவே இருக்கின்றனர்.அடுத்தவனிடம் பிடுங்கி தின்னும் இவர்களிடம்
நீதியையும்,ஒழுக்கத்தையும் எதிர்பார்ப்பது நம் தவறுதான்..
பதறிப்போய் உடலை அரசு மருத்துவ மனைக்கு எடுத்து சென்றால் மருத்துவர்
இல்லை சாவி இல்லை என உடலை அவசர ஊர்தியிலேயே காத்திருக்க வைத்துவிட்டு
சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.காரணம் பதிறிய உறவுகள் அவர்களிடம் இன்னும்
பணத்தை நீட்டவில்லை.உறவுகள் கோபத்தோடு எதிர்க்கையில் உடலை
மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்..அடுத்ததாக மருத்துவர்
வருகிறார்.இவர்கள் கோபப்பட்டதை அறிந்த மருத்துவர் நீங்கள் எப்படி
கோபப்படலாம் நான் நினைத்தால் இவர் குடித்து விட்டு வாகனத்தில் விழுந்து
விட்டார் என அறிக்கையை மாற்ற முடியும் என மிரட்டியிருக்கிறார்.இதைக்கேட்ட
உறவுகள் அதிர்ந்தே போய்விட்டார்கள்.இழந்த வேதனையில் இருந்தவர்களிடம் ஒரு
அரசு மருத்துவர் பேசும் பேச்சு இது..இறுதியில் உறவுகளை மன்னிப்பு கேட்க
வைத்தபின்தான் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார் அந்த மனிதம்
கொன்ற மருத்துவர்..இந்த சம்பவம் நடைப்பெற்றது குமரி மாவட்டத்தின்
குழித்துறை அரசு மருத்தவமனையில்..
.
அடுத்ததாக தக்கலை நகர காவல் நிலையம் .
புகார் கொடுக்கச் சென்றவர்களிடம் பேப்பர் வாங்கிட்டுவா,கார்பன் பேப்பர்
வாங்கிட்டுவா, பென் வாங்கிட்டுவா என அலக்கழித்துவிட்டு ஐநூறு ரூபாய்
கேட்டிருக்கிறார்கள் அதை வாங்கிக் கொண்ட பின்புதான் புகார் எழுதவே
அனுமதித்திருக்கிறார்கள்.இப்படி ஒவ்வொரு அதிகாரிகளை கடந்து வருகையில்
பிச்சைக்காசு ஆயிரத்து எண்ணூறு ரூபாபாய் பெற்றுக்கொண்டுதான் கடமையை
நிறைவேற்றியிருக்கிறார்கள் கடமை தவறா அதிகாரிகள்..விபபத்து நடந்த இடத்தை
பார்வையிட வந்த அதிகாரி பெட்ரோல் செலவு என அறுநூறு ரூபாய் பிச்சை
எடுத்திருக்கிறார்..
இப்படி நம் அரசு இயந்திரமும் அதன் உதிரிப்பாகாங்களும் மக்களுக்காக
இயங்குறோம் என சொல்லிக்கொண்டு மக்களின் ரத்தத்தையும் கண்ணீரையும்
எரிபொருளாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்...
.
இப்படிப்பட்ட கொடும்நிகழ்வுகளை பார்த்த கேட்ட பலர் உள்ளுக்குள்
கொந்தளித்து அதை எழுத்தாக மட்டுமே கொண்டு வர முடிகிறது..சுத்த
கையாலாகாத்தனம்தான் என்ன செய்வது நானும் சராசரி ஆயிற்றே...
.
.
பின் குறிப்பு..
குமரி மாவட்ட நண்பர்கள் இதை படித்தால் தயவு செய்து பகிரவும்...
February 3, 2014
விழிப்புணர்வு பிரச்சாரம் இப்படியும் செய்யலாம்.
தம்பதியினர்.தங்கள் திருமணம் முடிந்த அடுத்த பதினயிந்தாவது நிமிடத்தில்
திருமண மண்டபத்திலேயே ரத்ததானம் வழங்கினர்.மணமக்களை வாழ்த்த வந்த
ஐம்பதுக்கும் மேற்பட்ட சுற்றமும் கூடவே ரத்ததானம் வழங்கி தங்கள் வாழ்த்தை
தெரிவித்தனர்.
.
.
அவர்கள் மணமக்களல்ல மனமக்கள்...
தகவல் மற்றும் புகைப்படம்.
ONEINDIATAMIL
